Saina Nehwal – Kashyap’s Divorce: முடிவுக்கு வந்த பேட்மிண்டன் காதல் கதை.. சாய்னா நேவால் – பருப்பள்ளி காஷ்யப் பிரிவதாக அறிவிப்பு!
Saina Nehwal Announce Separation: சாய்னா நேவால் மற்றும் பருப்பள்ளி காஷ்யப் ஆகியோர் தங்களது பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிட்ட அறிவிப்பில், இருவரும் ஒவ்வொருவரும் அமைதியான வாழ்க்கையைத் தேர்வு செய்வதாகக் கூறியுள்ளனர். இவர்களின் காதல் கதை பேட்மிண்டன் மைதானத்திலிருந்து தொடங்கி, திருமணம் வரை சென்றது.

இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவால் (Saina Nehwal) அவரது கணவர் பருப்பள்ளி காஷ்யப்பிடமிருந்து (Parupalli Kashyap) பிரிய முடிவு (Separation) செய்துள்ளதாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இருவரின் காதல் கதையும் பேட்மிண்டன் மைதானத்திலிருந்தே தொடங்கியது. அதனை தொடர்ந்து, ஒருவரும் ஹைதராபாத்தில் உள்ள புல்லேலே கோபிசந்த் அகாடமியின் ஒன்றாக பயிற்சி பெற்றனர். முதலில் நட்பாக தொடங்கிய இவர்களது பழக்கம் காதலாக மாறி, திருமணத்தை எட்டியநிலையில் இப்போது முறிவை தொட்டது.
பிரிவு ஏன்..? – சாய்னா நேவால் விளக்கம்:
பிரிவு குறித்து சாய்னா நேவால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “ வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு பாதைகளில் அழைத்து செல்கிறது. நிறைந்த யோசனைக்கு பிறகு, பருப்பள்ளி காஷ்யப்பும் நானும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். ஒருவருக்கொருவர் அமைதி, வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த மறக்கமுடியாத தருணங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், மேலும் உங்கள் அனைவருக்கும் எதிர்கால நல்வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டு மதித்ததற்கு நன்றி.” என தெரிவித்துள்ளார்.




ALSO READ: சாரா டெண்டுல்கருடன் காதலா..? பொதுவெளியில் வெளிப்படையாக பேசிய சுப்மன் கில்
சாய்னா நேவால் திருமண வாழ்க்கை:
Saina Nehwal says on Instagram she is parting ways with Parupalli Kashyap. pic.twitter.com/WK1wlDCzxP
— Vinayakk (@vinayakkm) July 13, 2025
சாய்னா நேவாலும், பருப்பள்ளி காஷ்யப்பும் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். ஹரியானாவில் ஹிசார் பகுதியில் பிறந்த சாய்னா நேவால் பருபள்ளி காஷ்யப்பை விட 3 வயது சிறியவர். திருமணத்தின்போது சாய்னா நேவாலுக்கு 28 வயதும், பருபள்ளிக்கு 31 வயதுமாக இருந்தது. 30 வயதில் சாய்னா நேவால் அதாவது கடந்த 2020ம் ஆண்டு பாஜக கட்சியின் இணைந்து அரசியலில் நுழைந்தார்.
சாய்னா நேவாலின் பேட்மிண்டன் வாழ்க்கை:
கடந்த 2005ம் ஆண்டு சாய்னா நேவால் தனது 15 வயதில் ஆசிய போட்டியை வென்றார். தொடர்ந்து, கடந்த 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதன்படி, சாய்னா நேவால் தனது சர்வதேச பேட்மிண்டன் வாழ்க்கையில் 3 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். அதாவது, 2 பெண்கள் ஒற்றையர் பிரிவிலும், ஒன்று கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். 2015ம் ஆண்டில், சாய்னா நேவால் பேட்மிண்டன் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனை ஆனார்.
ALSO READ: இந்திய அணியில் மீண்டும் விளையாட ஆசை.. ஏமாற்றத்துடன் பேசிய அஜிங்க்யா ரஹானே..!
பருப்பள்ளி காஷ்யப் கடந்த 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். காஷ்யப் 2013 ஆம் ஆண்டில் தனது தொழில் வாழ்க்கையின் சிறந்த தரவரிசையைப் பெற்று, ஆறாவது இடத்தைப் பிடித்தார்.