Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Australia Test Squad: 12 ஆண்டுகளில் முதல் முறை.. இவர் இல்லாமல் டெஸ்டில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி!

Nathan Lyon Dropped: WTC 2025 புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாதன் லயனை விளையாடும் லெவனில் சேர்க்கவில்லை. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Australia Test Squad: 12 ஆண்டுகளில் முதல் முறை.. இவர் இல்லாமல் டெஸ்டில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி!
ஆஸ்திரேலிய ஜாம்பவான் நாதன் லயன்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Jul 2025 11:52 AM

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC 2025) புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அணி, தற்போது கிங்ஸ்டனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே தொடரை 2-0 என வென்றுள்ளது. இந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் (Australia Cricket Team) முதல் இன்னிங்ஸ் 225 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலியாவின் விளையாடும் லெவன் அணியில் ஒரு குறிப்பிட்டத்தக்க பெயர் இடம்பெறவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டு என்றால் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் (Nathan Lyon) நாதன் லயன், முதல் முறையாக ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

நாதன் லயன் ஏன் விளையாடும் அணியில் இருந்து நீக்கப்பட்டார்?

வெஸ்ட் இண்டீஸ் அணி எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிங்க் பந்தில் விளையாடப்படுகிறது. இந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டி சபீனா பார்க்கில் நடைபெறுகிறது. இங்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இதனால்தான் கேப்டன் பாட் கம்மின்ஸ், அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்டை விளையாடும் லெவன் அணியில் சேர்த்துள்ளார்.

ALSO READ: கடைசி நேரத்தில் நேரத்தை வீணடித்த க்ரௌலி.. கடுப்பாகி வாக்குவாதம் செய்த சுப்மன் கில்..!

12 ஆண்டுகளில் முதல் முறை:


கடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் விளையாடும் லெவனில் லயன் ஒரு பகுதியாக இருந்தார். 2013-ல் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் போது லயன் கடைசியாக விளையாடும் லெவன் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது லயன் மூன்று போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், அந்த நேரத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் நாதன் லயனின் செயல்திறன்:

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், பிங்க் பந்தில் விளையாடப்படும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் லியோன் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளையும், முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

ALSO READ: லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டு என்றால் என்ன..? இது ஏன் அவ்வளவு முக்கியம்..?

நாதன் லயன் இதுவரை 139 டெஸ்ட் போட்டிகளில் 259 இன்னிங்ஸ்களில் விளையாடி 30.14 சராசரியாக 562 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதன்படி, ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத்தை விட ஒரு விக்கெட் மட்டுமே பின்தங்கியுள்ளார். லயன் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால், ஆஸ்திரேலியாவிலிருந்து டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் மெக்ராத்துடன் இணைந்து 2வது இடத்தை பிடிப்பார். முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.