Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India vs England Test: 10 ஓவரில் 2 முறை பந்து மாற்றம்.. லார்ட்ஸ் டெஸ்டில் எழுந்த சர்ச்சை.. இந்திய வீரர்கள் அதிருப்தி..!

Duke Ball Performance Criticized: லார்ட்ஸ் டெஸ்டின் இரண்டாம் நாளில், டியூக்ஸ் பந்து 10 ஓவர்களுக்குள் இரண்டு முறை மாற்றப்பட்டது. பந்தின் செயல்பாடு குறைவாக இருந்ததால் இந்திய வீரர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

India vs England Test: 10 ஓவரில் 2 முறை பந்து மாற்றம்.. லார்ட்ஸ் டெஸ்டில் எழுந்த சர்ச்சை.. இந்திய வீரர்கள் அதிருப்தி..!
டியூக்ஸ் பந்து மாற்றம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Jul 2025 17:15 PM

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே (India – England Test Series) நடைபெற்று வரும் ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபியில் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி (Indian Cricket Team) 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தற்போது ஒரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி கடந்த 2025 ஜூலை 10ம் தேதி முதல் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் டியூக் பந்தில் (Dukes) விளையாடப்படுகிறது. ஆனால், இந்த பந்து போட்டியில் சிறப்பாக இல்லை என வீரர்கள் குறை கூறி வருவது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ALSO READ: வினோ மன்கட்டின் 73 ஆண்டு கால லார்ட்ஸ் சாதனை.. தகர்ப்பார்களா இந்திய இளம் பேட்ஸ்மேன்கள்..?

என்ன நடந்தது..?

லார்ட்ஸில் நடைபெற்று வர்ய்ம் 3வது டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் காலை அமர்வில் 2 முறை டியூக்ஸ் பந்து மாற்றப்பட்டது. அதாவது வெறும் 10 ஓவர்களுக்குள் மீண்டும் பந்து மாற்றப்பட்டதால் இந்திய வீரர்கள் கோபமடைந்தனர். இதையடுத்து, இந்திய கேப்டன் சுப்மன் கில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் உள்ளிட்டோர் போட்டி நடுவர்களுடன் விவாதத்தில் ஈடுப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே, முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் உள்ளிட்டோர் பந்து சரியில்லை என்றால் மாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டியூக்ஸ் பந்து கம்பெனி ஓனர் யார்..?

டியூக்ஸ் குடும்பத்தினரால் கடந்த 1970ம் ஆண்டு டியூக்ஸ் பந்து தயாரிக்கும் நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது, இந்த நிறுவனத்தின் உரிமையாளராக இந்திய தொழிலதிபர் திலீப் ஜஜோடியா உள்ளார். இவர் கடந்த 1987ம் ஆண்டு வாங்கினார். இந்த பந்தில் சிறப்பு என்னவென்றால், இந்த டியூக்ஸ் பந்தானது மீரட்டில் இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் இங்கிலாந்தில் இறுதி வேலைகள் மேற்கொள்ளப்படுகிறது.

ALSO READ: கபில் தேவின் சாதனையை முறியடித்த பும்ரா – இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆல் அவுட்

2 முறை மாற்றப்பட்ட பந்துகள்:

லார்ட்ஸ் டெஸ்டின் இரண்டாம் நாளின் காலை அமர்வில் டியூக்ஸ் பந்து 2 முறை மாற்றப்பட்டது. 10 ஓவர் பழைய பந்து மாற்றப்பட்ட பிறகும், போதுமான பவுன்ஸ், வேகத்தை கொடுக்கவில்லை. இதனால், இந்திய வீரர்கள் மீண்டும் பந்து குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக சில நிமிடங்களில் பந்தை மீண்டும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த டியூக்ஸ் உரிமையாளர் ஜஜோடியா, “18ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட தனது நிறுவனம், இங்கிலாந்தின் அசாதாரணமான வெப்பமான வானிலை மற்றும் இன்றைய கிரிக்கெட்டின் தேவைகளை மனதில் கொண்டு பந்தை மேம்படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார்.