Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

INDvsENG Test :கபில் தேவின் சாதனையை முறியடித்த பும்ரா – இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆல் அவுட்

Bumrah’s Record Feat : இங்கிலாந்து மற்றும் இந்தியா டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் பும்ரா தனது முதல் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதன் மூலம், வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் 13 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். இதுவரை அந்த சாதனை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

INDvsENG Test :கபில் தேவின் சாதனையை முறியடித்த பும்ரா – இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆல் அவுட்
பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Jul 2025 20:08 PM
இந்தியா – இங்கிலாந்து (England) இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10, 2025 அன்று துவங்கி நடைபெற்றிருக்கிறது.  இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) தனது சிறப்பான பந்துவீச்சால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் ஒரே இன்னிங்ஸில் தனது முதல் 5 விக்கெட்டை பதிவு செய்து, புகழ்பெற்ற Honours Board-இல் இடம் பிடித்துள்ளார். இரண்டாவது நாளில் இங்கிலாந்து (England) அணி 387 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதில் பும்ரா 22 ஓவர்கள் வீசி 74 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்தியா வலுவான நிலையில் இருக்கிறது.

கபில் தேவின் சாதனையை முறியடித்த பும்ரா

வெளிநாட்டில் டெஸ்ட் போட்டிகளில் 13 முறை 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். இது வரை அந்த சாதனை கபில் தேவிடம் இருந்தது. தற்போது கபில் தேவின் சாதனையை பும்ரா முறியடித்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார். இதனையடுத்து இந்திய பேட்ஸ்மேன்களின் பங்களிப்பை பொறுத்து இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இருக்கும்.
இங்கிலாந்தின் ஜோ ரூட், 104 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினாலும், மற்ற வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாததால், இங்கிலாந்து அணி பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (44), ஜேமி ஸ்மித் (51), மற்றும் ப்ரைடன் கார்ஸ் (50) போன்றவர்கள் கணிசமான பங்களிப்பை அளித்தனர். மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

பும்ராவின் 5 விக்கெட் சாதனை குறித்து பிசிசிஐ எக்ஸ் பதிவு

 

மேலும் லார்ட்ஸ் மைதானத்தின் பிட்ச் மெதுவாக இருந்ததால், அதிரடி ஆட்டம் சாத்தியமாகவில்லை இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட, இந்திய பந்துவீச்சாளர்கள், துல்லியமாக பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தினர். குறிப்பாக பும்ராவின் வேகம் இங்கிலாந்து வீரர்களை திணறடித்தது.

பும்ராவின் சாதனை

லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ரா இணைந்துள்ளார். முன்னதாக இந்தியாவைச் சேர்ந்த வெங்கடேஷ் பிரசாத், இஷாந்த் சர்மா, கபில் தேவ் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர். இந்த சாதனையால், பும்ரா இந்திய டெஸ்ட் அணியின் மிக முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார்.

அதிரடி காட்டுமா இந்தியா?

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்துள்ள நிலையில், தற்போது இந்தியா களமிறங்கி பதிலடி கொடுக்க உள்ளது. குறிப்பாக துவக்க வீரர்கள் வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைப்பது மிக முக்கியம். காரணம் லார்ட்ஸ் மைதானத்தில் பந்து மெதுவாகவே செல்கிறது. இதனால் அவர்கள் வலுவானதாக இருப்பது அவசியம்.