Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Shubman Gill: காத்திருக்கும் ராகுல் டிராவிட் சாதனை.. முறியடிப்பாரா சுப்மன் கில்..?

Gill Eyes Record-Breaking Test Series: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், கேப்டன் ஷுப்மன் கில் வரலாற்றுச் சாதனை படைக்க உள்ளார். ஏற்கனவே 585 ரன்கள் எடுத்த அவர், லார்ட்ஸில் நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் வெறும் 18 ரன்கள் எடுத்தால், இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைப்பார். இதுவரை ராகுல் டிராவிட் மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்களை பின்னுக்குத் தள்ளி இந்த சாதனையை அவர் படைக்கவுள்ளார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த அரிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Shubman Gill: காத்திருக்கும் ராகுல் டிராவிட் சாதனை.. முறியடிப்பாரா சுப்மன் கில்..?
இந்திய கேப்டன் சுப்மன் கில்Image Source: AP
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Jul 2025 12:01 PM

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் (India vs England Test Series) கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது போட்டி நாளை அதாவது 2025 ஜூலை 10 முதல் லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் (Indian Cricket Team) கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill) மிகப்பெரிய வரலாறு படைக்க வாய்ப்புள்ளது. அதன்படி, வரலாற்றின் பக்கங்களில் தனது பெயரை பதிவு செய்ய சுப்மன் கில் 3வது டெஸ்ட் போட்டியில் வெறும் 18 ரன்கள் எடுத்தால் போதுமானது. அதன்படி , இந்திய கேப்டன் சுப்மன் கில் என சாதனை படைக்கவுள்ளார் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். இந்தியாவுக்கும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளத்து. இந்தத் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் 585 ரன்கள் எடுத்துள்ளார். முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த சுப்மன் கில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் கில் இரட்டை சதம் அடித்தார். அதேநேரத்தில், 2வது இன்னிங்ஸில் 150 ரன்களை கடந்து விளையாடினார். இதன் காரணமாக, இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார்.

டிராவிட் சாதனையை முறியடிக்க வாய்ப்பு:

இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த சாதனை தற்போது முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் வசம் உள்ளது. ராகுல் டிராவிட் கடந்த 2002ம் ஆண்டில் 6 இன்னிங்ஸ்களில் 100 சராசரியுடன் 602 ரன்கள் எடுத்தார். இதன் பிறகு, விராட் கோலி இந்த சாதனை பட்டியலில் இடம் பிடித்தார். விராட் கோலி கடந்த 2018ம் ஆண்டு 10 இன்னிங்ஸ்களில் 59.30 சராசரியில் 593 ரன்கள் எடுத்தார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நான்கு இன்னிங்ஸ்களில் சுப்மன் கில் 585 ரன்கள் எடுத்துள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், சுப்மன் கில் அனைவரையும் பின்தங்கி லார்ட்ஸில் நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் மேலும் 18 ரன்கள் எடுத்தால், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார். அதேநேரத்தில், இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடந்த 1979ம் ஆண்டு ஏழு இன்னிங்ஸ்களில் 542 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த இந்திய கேப்டன்

எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்தார். இவ்வாறு செய்த மூன்றாவது இந்திய கேப்டன் இவர்தான். சுப்மன் கில்லுக்கு முன், விராட் கோலி கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்திருந்தார். இதற்கு முன், 1978ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சுனில் கவாஸ்கர் சதம் அடித்திருந்தார்.