Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India vs England 3rd Test: இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்டில் மழையா..? வானிலை நிலவரம் இதுதான்..!

India vs England 3rd Test Weather: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. வானிலை வெப்பமாகவும் வறண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம். இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணியின் கணிக்கப்பட்ட அணியினர் விவரங்கள் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.

India vs England 3rd Test: இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்டில் மழையா..? வானிலை நிலவரம் இதுதான்..!
லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Jul 2025 12:58 PM

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட (India vs England Test Series) டெஸ்ட் தொடரின் 3வது போட்டி இன்று அதாவது ஜூலை 10 ம் தேதி ‘கிரிக்கெட்டின் மெக்கா’ என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் (Lord’s Cricket Ground) இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 3.30 மணிக்கு முதல் பந்து வீசப்படும். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஸ்டேடியத்தில் இந்தியா – இங்கிலாந்து என இரு அணிகளும் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்க கடுமையாக போராடும். இந்தத் தொடரின் முதல் டெஸ்டில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் பர்மிங்காமில் நடந்த இரண்டாவது போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) 336 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதுபோன்ற சூழ்நிலையில், 3வது போட்டியின் பரபரப்பு இரட்டிப்பாகியுள்ளது. இந்தநிலையில், மழை குறுக்கீட்டு போட்டியில் தடை ஏற்படுமா என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

லார்ட்ஸில் வானிலை எப்படி..?

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக லார்ட்ஸ் டெஸ்டின் போது மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது போட்டி நடைபெறும் 5 நாட்களுக்கு வானிலை வெப்பமாகவும், வறண்டதாகவும் இருக்கலாம். அதன்படி, பகலில் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும், இரவில் 16 டிகிரி வரை குறையக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், காற்றின் வேகம் மணிக்கு 10 கிமீ வரை இருக்கும் என்றும், ஈரப்பதம் சுமார் 84 சதவீதமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், முதல் நாளில் மழை பெய்யும் என்ற பயம் இல்லை.

ALSO READ: இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்.. சுப்மன் கில்லுக்கு வார்னிங் கொடுத்த சவுரவ் கங்குலி!

லார்ட்ஸ் பிட்ச் எப்படி..?


லார்ட்ஸ் ஸ்டேடியத்தின் பிட்ச்சின் கடந்த சில நாட்களுக்கு முன்பு எடுத்த புகைப்படங்களில் பச்சை புல் தெளிவாகத் தெரிந்தது. இந்த முறை கியூரேட்டர் ஸ்டேடியத்தின் பிட்ச்சில் கூடுதல் தண்ணீரை ஊற்றவில்லை. இப்போது சிறிதளவில் மட்டுமே புல் தெரிவதால் இது முதல் இரண்டு நாட்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மைதானத்திலிருந்து நல்ல உதவி கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், இங்கிலாந்தின் கடந்த மோசமான பந்துவீச்சு உத்தியைப் பார்க்கும்போது, ​​போட்டி மெதுவான வேகத்தில் செல்லும் என்று முடிவு செய்ய முடியாது.

ALSO READ: லார்ட்ஸ் ஸ்டேடியம் யாருக்கு ராசி..? பும்ரா vs சிராஜ் செயல்திறன் விவரங்கள்!

கணிக்கப்பட்ட இந்திய அணியின் விவரம்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா

இங்கிலாந்து விளையாடும் லெவன் அணி:

ஜாக் க்ரௌலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர்