Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India vs England: லார்ட்ஸ் ஸ்டேடியம் யாருக்கு ராசி..? பும்ரா vs சிராஜ் செயல்திறன் விவரங்கள்!

Jasprit Bumrah vs Mohammed Siraj at Lord's: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் பங்களிப்பு மிகவும் முக்கியம். லார்ட்ஸில் பும்ராவின் சாதனை சிறப்பாக இல்லாவிட்டாலும், சிராஜ் சிறப்பாக விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

India vs England: லார்ட்ஸ் ஸ்டேடியம் யாருக்கு ராசி..? பும்ரா vs சிராஜ் செயல்திறன் விவரங்கள்!
பும்ரா - சிராஜ்Image Source: AP
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Jul 2025 11:15 AM IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான (India vs England Test Series) ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 3வது டெஸ்ட் போட்டி இன்று அதாவது 2025 ஜூலை 10 ம் தேதி முதல் லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் (Lord’s Cricket Ground) நடைபெறுகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றாலும், இரண்டாவது டெஸ்டில் எட்ஜ்பாஸ்டனில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது. இதன் மூலம், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படியான சூழலில், லார்ட்ஸ் டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) மீண்டும் இந்திய விளையாடும் லெவன் அணியில் இடம் பெறுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதன்படி, லார்ட்ஸ் என்னும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்டேடியத்தில் ஜஸ்பிரித் பும்ராவும், முகமது சிராஜும் இதுவரை எப்படி விளையாடியுள்ளார்கள்..? இவர்களின் கடந்த கால சாதனைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

லார்ட்ஸில் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனை:


ஜஸ்பிரித் பும்ரா இதுவரை லார்ட்ஸில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அந்த போட்டியில், அவர் இரண்டு இன்னிங்ஸ்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இந்த ஸ்டேடியத்தில் பும்ராவின் பந்துவீச்சு சராசரி 37.33 ஆகும். இது மோசமான சாதனை இல்லை என்றாலும், அதே மைதானத்தில் பும்ரா, மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் சாதனைக்குப் பின்னால் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: இனிமேதான் ஆட்டம் ஆரம்பம்.. சுப்மன் கில்லுக்கு வார்னிங் கொடுத்த சவுரவ் கங்குலி!

லார்ட்ஸில் முகமது சிராஜின் சாதனை:

பும்ராவை போன்று முகமது சிராஜும் லார்ட்ஸில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆனால் சிராஜின் செயல்திறன் மிகவும் சிறப்பாக உள்ளது. இங்கு நடைபெற்ற போட்டியில் முகமது சிராஜ் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இவரது சராசரி 15.75. 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த மைதானத்தில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார், எட்ஜ்பாஸ்டன் டெஸ்டிலும் சிராஜ் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், லார்ட்ஸ் போட்டியில் சிராஜ் ஒரு முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: 4 நாட்களுக்கு ஒருமுறை இதை செய்வேன்.. இதனால் டெஸ்ட் ஓய்வு! முதல் முறையாக மௌனம் கலைத்த கோலி..!

ஆகாஷ் தீப் 3வது டெஸ்டில் களமிறங்குவாரா..?

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆகாஷ் தீப், லார்ட்ஸ் டெஸ்டிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் ஆகாஷ் தீப் அற்புதமாக பந்து வீசி மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இவரது சிறப்பான செயல்திறனைக் கருத்தில் கொண்டு, ஆகாஷ் தீப் ஆடும் லெவனில் கண்டிப்பாக இடம்பெறுவார். லார்ட்ஸிலும் ஆகாஷ் தீப் எட்ஜ்பாஸ்டன் மேஜிக்கை மீண்டும் செய்வாரா என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.