KL Rahul Century: லார்ட்ஸில் 2வது சதம்.. புதிய வரலாறு படைத்த கே.எல்.ராகுல்!
India vs England 3rd Test: இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், கே.எல்.ராகுல் லார்ட்ஸ் மைதானத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 176 பந்துகளில் தனது 10வது டெஸ்ட் சதத்தையும், லார்ட்ஸில் இரண்டாவது சதத்தையும் பதிவு செய்தார். இதன் மூலம், லார்ட்ஸில் இரண்டுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் கே.எல்.ராகுல் பெற்றுள்ளார்.

லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட் (India – Pakistan 3rd Test) போட்டியில் 176 பந்துகளில் கே.எல்.ராகுல் (KL Rahul) தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது நடப்பு 2025 இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவரது 2வது சதமாகும். மேலும், அவரது டெஸ்ட் வாழ்க்கையில் 10வது சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம், லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் (Lord’s Cricket Ground) ஒன்றுக்கு மேற்பட்ட சதங்களை அடித்த 2வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். கே.எல். ராகுலுக்கு முன்பு, லார்ட்ஸில் ஒரே ஒரு இந்திய பேட்ஸ்மேன் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட சதங்களை அடித்துள்ளார்.
கலக்கிய கே.எல்.ராகுல்:
லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணிக்காக முதல் இன்னிங்ஸில் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, கே.எல்.ராகுல் ஒரு முனையை கெட்டியாக பிடித்துகொண்டார். கருண் நாயருடன் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கே.எல்.ராகுல், அதன்பிறகு ரிஷப் பண்டுடன் இணைந்து 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இது இந்திய அணி 300 ரன்கள் கடக்க உதவி செய்தது. அதேநேரத்தில், ரிஷப் பண்ட் 74 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
லார்ட்ஸில் 2வது சதம்:
CENTURY for KL Rahul! 👏👏
His 10th HUNDRED in Test Cricket 💯
And 2nd Ton at Lord’s 🏟️👌
Updates ▶️ https://t.co/X4xIDiSUqO#TeamIndia | #ENGvIND | @klrahul pic.twitter.com/vFDNhWsnH5
— BCCI (@BCCI) July 12, 2025
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம், லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் கே.எல்.ராகுல் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். இந்த வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தில் அவரது முதல் டெஸ்ட் சதம் 2021ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 129 ரன்கள் எடுத்தார். மறுபுறம், இந்தியாவுக்காக லார்ட்ஸில் அதிக சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை திலீப் வெங்சர்க்கார் படைத்துள்ளார்.
லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் திலீப் வெங்சர்க்கார் அதிகபட்சமாக மொத்தம் 3 சதங்களை பதிவு செய்துள்ளார். இவர் இந்தியாவின் மட்டுமல்ல, லார்ட்ஸ் மைதானத்தில் அதிக சதங்கள் அடித்த ஆசிய பேட்ஸ்மேனும் ஆவார்.
இதுவரை 10 இந்திய வீரர்கள் சதம்:
லார்ட்ஸில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக 10 பேட்ஸ்மேன்கள் சதம் அடித்துள்ளனர். லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் முதல் முதலாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை வினோ மன்கட் படைத்துள்ளார். இவருக்கு பிறகு, திலீப் வெங்சர்க்கார், குண்டப்பா விஸ்வநாத், ரவி சாஸ்திரி, முகமது அசாருதீன், சவுரவ் கங்குலி, அஜித் அகர்க்கர், ராகுல் டிராவிட், அஜிங்க்யா ரஹானே மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.