GV Prakash Kumar : மாறுபட்ட கதையில்.. ஜி.வி. பிரகாஷின் ‘பிளாக்மைல்’ படத்தின் ட்ரெய்லர் இதோ!
GV Prakash Blackmail Movie Trailer : தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரின் நடிப்பில் ரிலீசிற்கு தயாராகியிருக்கும் படம் பிளாக்மைல். இப்படம் வரும் 2025, ஆகஸ்ட் 1ம் தேதியில் வெளியாகும் நிலையில், படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் ஜி.வி. பிரகாஷ் (GV. Prakash Kumar) தமிழில் பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில், இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் கிங்ஸ்டன் (Kingston). கடந்த 2025 மார்ச் மாதத்தின் இறுதியில் வெளியான இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த படத்தை அடுத்ததாக நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார், அடுத்தடுத்த புதிய படங்களில் நடித்து வந்தார். அந்த வகையில் அறிமுக இயக்குநர் மு. மாறன் (Mu. Maran) இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்திருக்கும் படம் பிளாக்மைல் (Blackmail). இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தேஜு அஸ்வினி (Teju Ashwini) நடித்துள்ளார். மேலும் நடிகர் ஸ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படமானது முற்றிலும் க்ரைம் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த பிளாக்மைல் படமானது வரும் 2025, ஆகஸ்ட் 1ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் இணையத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க : அஜித் சாருடன்தான் அடுத்த படம்.. AK64 படத்தை இயக்குவதை உறுதி செய்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!
தனுஷ் வெளியிட்ட பிளாக்மைல் படத்தின் ட்ரெய்லர் பதிவு :
Here is #Blackmail trailer for u all … best of luck my brother @gvprakash https://t.co/vR2f47RNit
— Dhanush (@dhanushkraja) July 19, 2025
இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜே.டி.எஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் வைரலாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் ஜி.வி . பிரகாஷ் குமாருடன் நடிகர்கள், ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, ரெடின் கிங்ஸ்லி, தேஜு அஸ்வினி, வேட்டை முத்துக்குமார் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க : கவின் – பிரியங்கா மோகனின் படத்தின் கதை இதுவா? – வெளியான அப்டேட்!
இந்த படமானது குற்றம் சார்ந்த புதிய விதமான கதைக்களத்துடன் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரசித்தார்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் வரும் 2025 ஆகஸ்ட் 1ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் புதிய படம் :
இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் அடுத்தடுத்த படங்களிலும், நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார். அவர், அடங்கதே, இடிமுழக்கம், 13, மெண்டல் மனதில் மற்றும் இமார்டல் போன்ற திரைப்படங்களைத் தான் வசம் வைத்துள்ளார். இதில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்துவரும் படம் மெண்டல் மனதில். இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நிலையில், செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பை அடுத்ததாக, இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.