Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ajith Kumar : அஜித் சாருடன்தான் அடுத்த படம்.. AK64 படத்தை இயக்குவதை உறுதி செய்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

Adhik Ravichandran And Ajith Kumar Alliance Confirmed : நடிகர் அஜித் குமார் மற்றும் அதிக ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருந்த படம் குட் பேட் அக்லி. இப்படமானது வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தை அடுத்ததாக மீண்டும் அஜித் குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதைச் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி செய்துள்ளார்.

Ajith Kumar : அஜித் சாருடன்தான் அடுத்த படம்.. AK64 படத்தை இயக்குவதை உறுதி செய்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!
ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அஜித் குமார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Jul 2025 16:06 PM

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran). இவரின் இயக்கத்தில், தமிழில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி (GOOd Bad Ugly). நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) மற்றும் திரிஷா கிருஷ்ணனின் (Trisha Krishnan) முன்னணி நடிப்பில் இப்படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியான இப்படம் சுமார் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் கார் ரேஸில் (Car Race) கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அஜித்தின் 46வது படத்தை, கார்த்தி சுப்பராஜ் அல்லது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துடன் அடுத்த படத்தை உறுதி செய்துள்ளார்.

அவர் அதில் “அஜித் சாருடன் அடுத்த படம் பண்ணும் வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது, மிகவும் சந்தோசமாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார். இந்நிலையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான், அஜித்தின் AK64 படத்தை இயக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : துருவ் விக்ரமின் ‘பைசன்’.. தமிழ்நாடு ரிலீஸ் உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனம்!

செய்தியாளர்கள் சந்திப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் பேசிய விஷயம் :

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரனிடம், நீங்கள் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறீர்களா எனக் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “ஆமாம், நெக்ஸ்ட் சாருடன் படம் பண்ணுவதற்காக வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க : நான் அப்செட் ஆகிவிட்டால் இதைச் செய்வேன்.. நடிகை கீர்த்தி சுரேஷ் சொன்ன விஷயம்!

அது எனக்கு மிகவும் சந்தோசம். மேலும் இப்படம் குட் பேட் அக்லி படத்தை ஒப்பிடும்போது வித்தியாசமாக இருக்கும், ஏனென்றால் பண்ணப் படத்தையே மீண்டும் பண்ண முடியாது. அதனால் அஜித்தின் புதிய படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்த புதிய படத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த தகவலானது அஜித் குமாரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் வெளியிட்ட அஜித் புகைப்படங்கள் பதிவு :

குட் பேட் அக்லி திரைப்படமானது எதிர்பார்த்ததைவிடவும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்தில் நடிகர்கள் திரிஷா கிருஷ்ணன், பிரபு, பிரசன்னா , சுனில், அர்ஜுன் தாஸ் மற்றும் பிரியா பிரகாஷ் வாரியர் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்தப் படம் வெற்றியான நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் அஜித் குமாருடன் புதிய படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.