Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Keerthy Suresh : நான் அப்செட் ஆகிவிட்டால் இதைச் செய்வேன்.. நடிகை கீர்த்தி சுரேஷ் சொன்ன விஷயம்!

Keerthy Suresh On Coping With Her Mental Illness : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அப்செட் ஆகிவிட்டால் செய்யும் விஷயங்களைப் பற்றி வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Keerthy Suresh : நான் அப்செட் ஆகிவிட்டால் இதைச் செய்வேன்.. நடிகை கீர்த்தி சுரேஷ் சொன்ன விஷயம்!
கீர்த்தி சுரேஷ்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 19 Jul 2025 14:22 PM

நடிகை கீர்த்தி சுரேஷின் (Keerthy Suresh) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம், ரகு தாத்தா (Raghu Thatha). கடந்த 2024ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குநர் சுமன் குமார் இயக்கியிருந்தார். இந்த படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இந்தியில் பேபி ஜான் (Baby John) என்ற திரைப்படத்தின் மூலமாகக் கதாநாயகியாகவும் அறிமுகமானார். இந்த படமானது தமிழில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில் வெளியான தெறி படத்தின், இந்தி ரீமேக் படமாகும். படத்தில் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது இவருக்குக் கலவையான வரவேற்பையே கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்தாக ரிவால்வர் ரீட்டா (Revolver Rita) மற்றும் கண்ணிவெடி போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலை ஒன்றில் பேசிய அவர், தான் சோகமாக இருக்கும்போது, செய்யும் விஷயங்களைப் பற்றி ஓபனாக கூறியுள்ளார். அவர் எப்போது சோகமாக இருந்தாலும் நன்றாக சாப்பிடுவேன் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதை பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயன் மீது ஏன் இவ்வளவு வன்மம்.. லவ் மேரேஜ் பட இயக்குநர் வருத்தம்!

அப்செட்டாக இருக்கும் போது கீர்த்தி சுரேஷ் செய்யும் விஷயங்கள் :

அந்த நேர்காணலில் நடிகை கீர்த்தி சுரேஷிடம் அப்செட் அல்லது மனசு சரியில்லை என்றால் என்ன செய்வேன் எனக் கூறியுள்ளார் . அதில் நடிகை கீர்த்தி சுரேஷ், ” நான் சில டைம் அப்செட் ஆகிவிடுவேன் . அப்போது நான் நன்றாகச் சாப்பிடுவேன், அதைப்போலக் காரை தனியாக எடுத்துக்கொண்ட ஒரு டிரைவ் செய்வேன். அப்போது மகிழ்ச்சியான பாடல்களைக் கேட்பேன். மேலும் அதுமட்டுமின்றி எனது வீட்டில் நாய்க்குட்டி ஒன்று இருக்கிறது.

இதையும் படிங்க : முதல் பாதியைக் கேட்ட பிறகு, கூலியில் ரஜினி நடிக்க முடிவு செய்தாரா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

எனக்கு என்ன அப்செட் ஏற்பட்டாலும், அதன் முகத்தைப் பார்த்தாலே போதும் அனைத்தும் காலால் போய்விடும்” என நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த நேர்காணலில் ஓபனாக பேசியுள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷின் ரீசென்ட் இன்ஸ்டாகிராம் பதிவு :

கீர்த்தி சுரேஷின் புதிய படங்கள் :

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் கிட்டத்தட்ட 2 படங்களில் நடித்துள்ளார். இப்படங்களில் படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதில் ரிலீசிற்கு தயாராகியிருக்கும் படம் ரிவால்வர் ரீட்டா. இயக்குநர் ஜேகே.சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 2025, ஆகஸ்ட் 27ம் தேதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகிறது. மேலும் இப்படத்தை அடுத்ததாகக் கண்ணிவெடி என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படமானது இறுதிக்கட்ட பணிகளில் இருப்பதாகக் கூறப்படுகிறது.