Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Chiyaan Vikram : 96 பட இயக்குநரின் படத்தில் ஆக்ஷன் அவதாரத்தில் விக்ரம்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?

Chiyaan Vikram 64th Movie Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் சியான் விக்ரம். இவரின் நடிப்பில் புதியதாக உருவாக்கவுள்ள திரைப்படம் சியான்64 திரைப்படம். இயக்குநர் பிரேம் குமார் இயக்கும், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகும் என்பதைப் பற்றிய தகவல் இணையத்தில் வரலாகி வருகிறது.

Chiyaan Vikram : 96 பட இயக்குநரின் படத்தில் ஆக்ஷன் அவதாரத்தில் விக்ரம்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?
சியான் விக்ரம் மற்றும் பிரேம் குமார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Jul 2025 20:36 PM

நடிகர் சியான் விக்ரம் (Chiyaan Vikram) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் வீர தீர சூரன் 2 (Veera Dheera Sooran). இந்த படத்தைச் சித்தா திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் (S.U. Arun Kumar) இயக்கியிருந்தார். கடந்த 2025 மார்ச் மாதத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்து இயக்குநர் மடோன் அஸ்வின் (Madone Ashwin) இயக்கத்தில் சியான்63 படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்தை அடுத்ததாக 96 படப் புகழ் இயக்குநர் பிரேம் குமாரின் (Prem Kumar) இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த புதிய படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் பற்றியும் இப்படத்தின் கதைக்களம் பற்றியும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன் படி இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. இது குறித்து விகடன் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பிக் பாஸ் ராஜுவின் ‘பன் பட்டர் ஜாம்’ படம் எப்படி இருக்கு? எக்ஸ் விமர்சனங்கள் இதோ

சியான் விக்ரமின் 64வது படத்தின் கதைக்களம் என்ன :

இந்த சியான்64 திரைப்படமானது முழுக்க ஆக்ஷ்ன் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாம், மேலும் சஸ்பென்ஸ் கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது இயக்குநர் பிரேம் குமார் இயக்கும் முதல் ஆக்ஷன் திரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் பிரேம் குமார் 96 பார்ட் 2 படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், விக்ரமின் 64வது படத்தை முடித்த பிறகே 96 பார்ட் 2 படத்தை இயக்குபவர் எனக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : மீண்டும் ‘ப்ரீடம்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு.. சோகத்தில் ரசிகர்கள்!

சியான் விக்ரமின் 64வது படத்தின் அறிவிப்பு பதிவு :

சியான் விக்ரமின்63 திரைப்படம் :

வீர தீர சூரன் திரைப்படத்தை அடுத்ததாக நடிகர் விக்ரம் ஒப்பந்தமான திரைப்படம் சியான்63. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியாகிய நிலையில், இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகவில்லை. இந்த படத்தின் ஷூட்டிங்குடன், இயக்குநர் பிரேம் குமாரின் புதிய படத்திலும் விக்ரம் இணைந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது.