Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Movie Review : பிக் பாஸ் ராஜுவின் ‘பன் பட்டர் ஜாம்’ படம் எப்படி இருக்கு? எக்ஸ் விமர்சனங்கள் இதோ!

Bun Butter Jam Movie X Reviews : சின்னதிரையிலிருந்து சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளவர் பிக் பாஸ் புகழ் நடிகர் ராஜு மோகன். இவரின் நடிப்பில் முதல் படமாக வெளியாகியுள்ளது இந்த பன் பட்டர் ஜாம். இன்று 2025, ஜூலை 18ம் தேதியில் வெளியான இப்படம் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

Movie Review : பிக் பாஸ் ராஜுவின் ‘பன் பட்டர் ஜாம்’ படம் எப்படி இருக்கு? எக்ஸ் விமர்சனங்கள் இதோ!
பன் பட்டர் ஜாம் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 18 Jul 2025 15:59 PM

தமிழ் சினிமாவில் சின்னதிரையில் இருந்து நடிகராக மாறிய பல நடிகர்கள் சினிமாவில் உள்ளனர். அந்த விதத்தில் பன் பட்டர் ஜாம் (Bun Butter Jam) என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளவர் நடிகர் ராஜு மோகன் (Raju Mohan). இவர் இப்படத்திற்கு முன் சில படங்களில் துணை வேடத்தில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் இந்த பன் பட்டர் ஜாம் திரைப்படமானது இன்று 2025, ஜூலை 18ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் (Raghav Mirdath இயக்கியுள்ளார். இவன் இயக்கத்தில் வெளியான இப்படம் காதல், காமெடி போன்ற கதைகளத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ராஜுவுடன் இரு கதாநாயகிகள் இணைந்து நடித்துள்ளனர். ஜோ படத்தில் நடித்த நடிகை பவ்யா த்ரிகா (Bhavya Trikha) மற்றும் நடிகை ஆதியா பிரசாத் என இரு நடிகைகள் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ண, தேவதர்ஷினி, சார்லி மற்றும் வி.ஜே. பப்பு என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படமானது இன்று 2025, ஜூலை 18ல் வெளியாகியிருக்கும் நிலையில், இப்படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் பற்றிப் பார்க்கலாம்.

பன் பட்டர் ஜாம் படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் பதிவு :

இந்த பன் பட்டர் ஜாம் திரைப்படமானது Gen-Z கிட்ஸ் காதல் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாம். இப்படத்தில் முதல் பாதி மிகவும் அருமையாக உள்ளதாம் மற்றும் இரண்டாம் பாதி எமோஷனல் கதைக்களத்துடன் உள்ளதாம் மொத்தத்தில் இப்படமானது ஒரு என்டேர்டைமென்ட் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

நடிகர்களின் நடிப்பு எவ்வாறு உள்ளது :

இந்த படமானது கல்லூரி காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள நிலையில், பிக் பாஸ் ராஜு கதாநாயகனா நடித்துள்ளார். கல்லூரி காதல் படமாகப் பல படங்கள் வெளியாகியிருந்தாலும், இப்படம் கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. இப்படத்தில் ராஜுவின் நடிப்பும், அவருக்கு அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணனுடைய நடிப்பு மிக அருமையாக வந்துள்ளது எனக்கூறப்படுகிறது.

கேமியோ ரோலில் நடிகர் விக்ராந்த் :

இந்த பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவின் இசையமைப்பு மிக அருமையாக உள்ளதாம். மேலும் இதில் நடிகர் விக்ராந் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதில் அவரின் கதாபாத்திரமும் மிக அருமையாக வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பன் பட்டர் ஜாம் படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா:

மொத்தத்தில் இந்த பன் பட்டர் ஜாம் திரைப்படமானது Gen- Z கிட்ஸ் வாழ்க்கை மற்றும் பேமிலி என்டேர்டைமென்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் ரொமாண்டிக் காதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. காதல் மற்றும் ரோமெண்டிக் கதைக்களம் பிடித்தவர்கள் நிச்சயமாக இப்படத்தைச் சென்று பார்க்கலாம்.