Benz : ராகவா லாரன்ஸ் – நிவின் பாலியின் ‘பென்ஸ்’ – லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!
Benz Movie Shooting Update : இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படமாக உருவாகிவருவது பென்ஸ் திரைப்படம். இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரித்துவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது நிறைவடையும் என்பதைப் பற்றிய அப்டேட் கொடுத்துள்ளார்.

நடிகர்கள் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) மற்றும் நிவின் பாலி (Nivin Pauly) முன்னணி வேடத்தில் இணைந்து நடித்துவரும் திரைப்படம்தான் பென்ஸ் (Benz). இந்த படத்தை தமிழ் பிரபல இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (Bakkiyaraj kannan) இயக்கிவருகிறார். இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) எழுதி மற்றும் தயாரித்து வருகிறார். இந்த பென்ஸ் படமானது , லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படங்களைத் தொடர்புப்படுத்தி உருவாகிவருகிறது. இந்த படமானது முற்றிலும் அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களம் கொண்டு உருவாகிவருகிறது. இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் நிலையில், நடிகர் நிவின் பாலி நெகடிவ் ரோலில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2025, ஏப்ரல் மாதத்தின் இறுதியில் பூஜைகளுடன் ஆரம்பமான நிலையில், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தின் ஷூட்டிங், சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பென்ஸ் படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் பற்றிப் பேசியுள்ளார். அதில் அவர் இன்னும் 4 மாதங்களில் பென்ஸ் படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிடும் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
இதையும் படிங்க : ரிலீசுக்கு தயாரான ‘மாரீசன்’.. வெளியான சென்சார் சான்றிதழ்!
லோகேஷ் கனகராஜ் பென்ஸ் படம் குறித்து பேச்சு :
அந்த நேர்காணலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் பென்ஸ் திரைப்படத்தைப் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் அவர், “பென்ஸ் படத்தின் இரு கட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது, இந்த படத்தின் காட்சிகளை நான் இன்னும் பார்க்கவில்லை, இந்த படத்திற்கு பிலோமின் எடிட்டர், அவர்தான் இந்த பென்ஸ் படத்தைப் பற்றிய தகவல்களை எனக்குக் கொடுத்து வருகிறார்.
மேலும் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக இன்னும் 3 அல்லது 4 மாதங்களுக்குள் நிறைவடைந்துவிடும். இந்த படத்தை அடுத்ததாகப் பல கதைகள் காத்திருக்கிறது” என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு.. ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு!
லோகேஷ் கனகராஜ் பென்ஸ் படம் குறித்து பேசிய வீடியோ :
#LokeshKanagaraj Recent
– Two schedules of #Benz have been completed.
– I haven’t seen any footage from the film Benz yet.
– Philomin is the editor of the film, so he gives me some updates about it.
– The shoot will be completed in the next 4 months.pic.twitter.com/zcOaMM03Dn— Movie Tamil (@MovieTamil4) July 17, 2025
பென்ஸ் திரைப்படம் :
இந்த பென்ஸ் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்க, பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் நிவின் பாலி, ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் உருவாகும் இப்படம் வரும் 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.