‘லியோ 2’, ‘மாஸ்டர் 2’ படங்களை இயக்க ஆசை.. ஆனால்? – லோகேஷ் கனகராஜ் பேச்சு!
Lokesh Kanagaraj Wants To Direct Films With Thalapathy Vijay : இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது அந்த வகையில் இவரின் இயக்கத்தில் கூலி திரைப்படம் ரிலீசிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலில் பேசிய லோகேஷ், விஜய்யுடன் பணிபுரிய ஆசை எனக் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த்தின் (Rajinikanth) கூலி (Coolie) திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவர் மாநகரம் என்ற படத்தின் மூம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக கார்த்தியுடன் கைதி (Kaithi), விஜய்யுடன் (Vijay) மாஸ்டர் மற்றும் லியோ (Leo), கமல்ஹாசனுடன் (Kamal haasan) விக்ரம் என பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடிப்பில் கூலி படத்தையும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படமானது அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்துடன் மிகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு, படத்தின் ப்ரோமோஷன் வேலைகளும் சிறப்பாகத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கூலி படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நேர்காணலில் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் தனக்கு எப்போதும் மாஸ்டர் 2 (Master 2) மற்றும் லியோ 2 (Leo 2) திரைப்படத்தை இயக்குவதற்கு ஆசையாக இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் அதில் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : நான் ஜீனியஸ் இல்ல… சஞ்சய் தத் கருத்துக்கு லோகேஷ் கனகராஜ் பதிலடி!
தளபதி விஜய்யுடன் பணிபுரிய வேண்டும் என லோகேஷ் கனகராஜ் பேச்சு :
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பேசிய நேர்காணலில் அவர், “கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து நிறையப் படங்கள் எனது கைவசத்தில் இருக்கிறது. எனது அடுத்த படமாகக் கைதி 2 திரைப்படம் இருக்கும். மேலும் நடிகர் கமல்ஹாசனுடனும் விக்ரம் 2 படத்தையும் இயக்கவிருக்கிறேன். ஆனால் நான் லியோ 2 மற்றும் மாஸ்டர் 2 திரைப்படத்தை இயக்கவே ஆசைப் படுகிறேன், ஆனால் விஜய் அண்ணா அதற்கு சினிமாவில் இல்லை. மேலும் ரோலெக்ஸ் திரைப்படம் இருக்கிறது என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஓபனாக கூறியிருந்தார்.
இதையும் படிங்க : வாழ்க்கையில் இவர் கூட படமே பண்ணக்கூடாதுனு நினைத்தேன்.. இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
லோகேஷ் கனகராஜ் பேசிய வீடியோ :
#LokeshKanagaraj Recent
– #Kaithi2 is my next, but I have commitments with #KamalHaasan sir complete #Vikram2.
– I want to do #Leo2 & #Master2 and all but #Vijay anna will not be available.#Cooliepic.twitter.com/5y9vf0ublq— Movie Tamil (@MovieTamil4) July 14, 2025
லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி விஜய் கூட்டணி
தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தமிழ் சினிமாவில் இதுவரை 2 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. கார்த்தியின் கைதி திரைப்படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது இருவருக்குமே மிகப் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை அடுத்ததாகக் கடந்த 2023ம் ஆண்டு வெளியான லியோ படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது உலகளாவிய வசூலில் சுமார் ரூ. 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.