Karuppu : எதிர்பார்ப்பில் சூர்யாவின் ‘கருப்பு’.. இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்!
Karuppu Movie Update : சூர்யாவின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு தயாராகிவரும் திரைப்படம் கருப்பு. இந்த படத்தை தமிழ் பிரபல இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். இவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படத்தை பற்றி ஆர்.ஜே. பாலாஜி அப்டேட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநர் என பல்வேறு பணிகளைச் செய்துவருபவர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji). இவரின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் கருப்பு (Karuppu). இந்த படத்தில் முன்னணி கதாநாயகனாக நடிகர் சூர்யா (Suriya) நடித்துள்ளார். இந்த படமானதுஆரம்பத்தில் சூர்யா45 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் படப்பிடிப்பானது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மிகப் பிரம்மாண்டமாகத் தொடங்கியிருந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இவர்கள் சுமார் 20 வருடங்களுக்குப் பின் இப்படத்தில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யா இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா46 (Suriya46) படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் வரும் 2025, ஜூலை 23ம் தேதியில் சூர்யாவின் 50வது பிறந்தநாளை வரும் நிலையில், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி அப்டேட் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் சூர்யாவின் கண் புகைப்படத்தைப் பகிர்ந்து, “Serving soon” என அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : கூலி படத்தின் 3வது பாடல் எப்போது? படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்ட அப்டேட் பதிவு :
Serving soon 🔥🔥🔥@Suriya_offl ❤️❤️❤️#Karuppu 🖤🖤🖤 pic.twitter.com/UCD1dY6kUV
— RJB (@RJ_Balaji) July 17, 2025
சூர்யாவின் பிறந்தநாளில் கருப்பு படத்திலிருந்து வெளியாகும் அப்டேட் :
நடிகர் சூர்யாவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு படத்திலிருந்து ரசிகர்களுக்குப் பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. சூர்யாவின் பிறந்தநாளில் கருப்பு படத்திலிருந்து அறிமுக டீசர் மற்றும் கருப்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் அறிமுக வீடியோவுடன் அவரின் கதாபாத்திரத்தின் பெயரும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்த தகவலானது தற்போது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : இன்று ஒரே நாளில் வெளியான 14 படங்கள்.. விவரம் இதோ!
சூர்யாவின் கருப்பு படத்தின் இசை உரிமையைப் பெற்ற நிறுவனம் :
நடிகர் சூர்யாவின் கருப்பு படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த படமானது இவர் இசையமைப்பாளராக ஒப்பந்தமான 2வது தமிழ்ப் படமாகும். இந்த படமானது கிராமத்தது ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இசை ரிலீஸ் உரிமையை “திங் மியூசிக்” நிறுவனமானது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2025 தீபாவளிக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.