Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jana Nayagan VS Parasakthi: ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி? – சுதா கொங்கரா பதில்

Jana Nayagan VS Parasakthi Movies Clash : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகி இருப்பவர் விஜய். இவரின் இறுதி படமாகக் கூறப்படும் ஜன நாயகன் வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இந்த படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் மோதுவதாகக் கூறப்படும் நிலையில், இயக்குநர் சுதா கொங்கரா விளக்கம் கொடுத்துள்ளார்.

Jana Nayagan VS Parasakthi: ஜனநாயகனுடன் மோதுகிறதா பராசக்தி? – சுதா கொங்கரா பதில்
ஜன நாயகன் மற்றும் பராசக்திImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Jul 2025 10:41 AM

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் முன்னணி நடிப்பில் மதராஸி (Madhaarasi) மற்றும் பராசக்தி (Parasakthi) என 2 படங்கள் தயாராகிவருகிறது. இந்த படங்களின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில், மேலும் புதிய படங்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகிவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அமரன் படமானது எதிர்பார்த்ததை விடவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை அடுத்தாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும், இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். இதில் மதராஸி படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாகக் கூறப்படும் நிலையில், தற்போது பராசக்தி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கராவிடம், ஜன நாயகனுடன் (Jana Nayagan) பராசத்தி திரைப்படம் மோதுகிறதா என்ற கேள்விக்குப் பதில் கொடுத்துள்ளார். அதில் அவர், “எனக்குத் தெரியாதது தயாரிப்பாளருக்குத்தான் தெரியும்” என அவர் அதில் கூறியுள்ளார். மேலும் அவர் பேசியது பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க : ராகவா லாரன்ஸ் – நிவின் பாலியின் ‘பென்ஸ்’ – லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

பராசக்தி படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் சுதா கொங்கரா :

அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுதா கொங்கரா, “சிவகார்த்திகேயன் பராசக்தி படத்திற்கு ஏற்ற நடிகர்தான். அவரின் கதாபாத்திரம் இப்படத்தில் நன்றாக வந்திருக்கிறது. சிவகார்த்திகேயன் பக்கத்துக்கு வீட்டுப் பையனைப்போல இருக்கும் திறமையான கதாபாத்திரம் எனக்குப் பிடிக்கும். அதுபோலத்தான் பராசக்தியிலும் அவரின் கதாபாத்திரம் இருக்கும்.

இதையும் படிங்க : முதல் பாதியைக் கேட்ட பிறகு, கூலியில் ரஜினி நடிக்க முடிவு செய்தாரா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

மேலும் இந்த படத்தில் ரவி மோகனின் கதாபாத்திரம் இதுவரை நீங்கள் பார்க்காததுபோல இருக்கும். அவர் நடிப்பு பிடிக்கும் என நினைக்கிறேன் என பேசினார். பின் நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்துடன் பராசக்தி படம் மோதுகிறாதா எனக் கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், “எனக்குத் தெரியாது தயாரிப்பாளருக்குத்தான் தெரியும், எனக்கு நிஜமாகவே தெரியாது” என அவர் பதில் கொடுத்திருந்தார்.

சுதா கொங்கரா பேசிய வீடியோ :

பராசக்தி படத்தின் ரிலீஸ் எப்போது :

சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படமாகப் பராசக்தி உருவாகிவருகிறது. இந்த படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதைப் பற்றி இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனும் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார் . ஒருவேளை பொங்கல் பண்டிகையில் இப்படம் ரிலீஸ் ஆனால் , ஜன நாயகன் படத்தில் வெளியீட்டிற்கு 3 அல்லது 4 நாட்களுக்குப் பின் வெளியாகும் என இணையத்தில் தகவல் வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.