AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு… 2 மடங்கு உயர்ந்த விறகு விலை – தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

Fuel Crisis Impact : மேற்கு ஆசியா பகுதிகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக வர்த்தக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது. இதனால் ஹோட்டல்கள் விறகுகளை பயன்படுத்தி வரும் நிலையில் மதுரையில் விறகு விலை ஒரே நாளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு… 2 மடங்கு உயர்ந்த விறகு விலை – தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 12 Mar 2026 08:51 AM IST

மதுரை, மார்ச் 11 : மேற்கு ஆசியா பகுதிகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக வர்த்தக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான உணவகங்களில் சிலிண்டர் விநியோகம் தடை விதிக்கப்பட்டிருப்பதால் உணவகங்கள் மாற்று வழியை நாடி வருகின்றன. பெரும்பாலான உணவகங்களில் மெனுவை குறைத்துள்ள நிலையில், பழைய முறையில் விறகில் சமைக்கும் முறைக்கு மாறி வருகின்றன. இதனால் விறகுகளின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதனால் விரைவில் விறகுகளுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 மடங்கு உயர்ந்த விறகுகளின் விற்பனை

இந்த நிலையில் மதுரையில் விறகு விலை ஒரே நாளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சில நாட்களில் விறகுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும் பல உணவகங்கள் மாற்று எரிபொருளாக பயன்படுத்த தொடங்கியுள்ள நிலையில் சந்தையில் அதன் தேவை அதிகரித்துள்ளது. இதனால் டிமாண்ட் காரணமாக அதன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன.

இதையும் படிக்க : கேஸ் தட்டுப்பாடு – சென்னையில் கடைகளில் டீ விற்பனை நிறுத்தம்…. வடைகளின் விலை உயர்வு

மதுரையில் மாட்டுத்தாவனி பேருந்து நிலையத்திற்கு அருகே முக்கிய விறகு சந்தை இயங்கி வருகிறது. தென் மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் விறகுகள் அங்கிருந்து மொத்தமாக சில்லறையாகவோ தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படும். தினமும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சுமார் 300 டன் அளவிற்கான விறகுகள் கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மதுரையில் உள்ள பல உணவகங்கள் சமையலுக்காக விறகை பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதனால் விறகு சந்தைக்கு அதிக அளவில் மக்கள் திறண்டு வருவதால், மொத்த மற்றும் சில்லறை விற்பனை அதிக அளவில் உயர்ந்துள்ளன. பொதுவாக விறகு விற்பனை குறைவாகவே நடைபெற்று வந்த நிலையில் திடீரென தேவை அதிகரித்துள்ளதால் விறகு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: விறகடுப்புகளுக்கு மாறும் சென்னை ஹோட்டல்கள்

கடந்த சில நாட்களுக்கு முன் வரை ஒரு டன் விறகு ரூ.10,000க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.12, 000 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு கிலோ விறகு முன்பு ரூ.150 ஆக விற்கப்பட்ட நிலையில் தற்போது 2 மடங்கு அதிகரித்து ரூ. 300க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு அதிகபட்சம் ஒரு டன் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு நாளைக்கு 10 டன் விறகுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us