AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முற்றும் ஈரான் போர்?.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக 6 மாதங்கள் போர் புரிய தயார் என கூறிய ஈரான்!

War Between Iran and Israel, America Getting Hard | ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து 6 மாதங்களுக்கு தாங்கும் அளவுக்கு தங்களிடம் ஏவுகணைகள் தயாராக உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

முற்றும் ஈரான் போர்?.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக 6 மாதங்கள் போர் புரிய தயார் என கூறிய ஈரான்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 08 Mar 2026 20:44 PM IST

ஈரான், மார்ச் 08 : ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) மற்றும் அமெரிக்கா (America) தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஈரான் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 6 மாதங்களுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக அது தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே நிலவும் போர் குறித்து ஈரான் தெரிவித்துள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்கா, இஸ்ரேல்

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி வந்த இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து பிப்ரவரி 28, 2026 முதல் ஈரான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக ஈரான் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளது. குறிப்பாக ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக கடும் ஆத்திரத்திற்கு உள்ளாகியுள்ள ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இதையும் படிங்க : “அண்டை நாடுகள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம்”.. மன்னிப்பு கேட்ட ஈரான்

9வது நாளாக நீடித்து வரும் ஈரான் மீதான் போர்

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் 9வது நாளாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் மீது இன்று (மார்ச் 08, 2026) வலிமையான போர் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் ஈரான் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஈரான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : ஈரான் போர் எதிரொலி: உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை.. ஆட்டம் காணும் அமெரிக்கப் பங்குச்சந்தை

பதில் அறிக்கை வெளியிட்ட ஈரான்

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஈரான், எங்களிடம் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஏவுகணை சேமிப்பு உள்ளது. 6 மாதங்களுக்குத் தொடர்ந்து ஏவுகணைகளை ஏவும் அளவுக்கு பல்லாயிரக்கணக்கான பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் உள்ளன. இரான் இதுவரை பயன்படுத்தாத பத்தாஹ் – 2 போன்ற ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை இனி ஏவப்போகிறோம். இவை ஒலியின் வேகத்தை விட 15 மடங்கு வேகமாக செல்லக்கூடியவை. இவற்றை இஸ்ரேலின் ஆரோ அல்லது டேவிட்ஸ் ஸ்லிங் தடுப்பு அமைப்புகளால் தடுப்பது மிக மிக கடினம் என்று கூறியுள்ளது.

Follow Us