ஹே மின்னலே… இணையத்தில் கவனம் பெறும் சாய் பல்லவியின் இன்ஸ்டா போஸ்ட்!
நடிகை சாய் பல்லவி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது இந்தி மொழியில் பிசியான நடிகையாக மாறியுள்ளார். அதன்படி இந்தியில் தற்போது ரன்பீர் கபூர் உடன் இணைந்து ராமாயணா படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரவி மோகன் மற்றும் கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை சாய் பல்லவி (Actress Sai Pallavi). அதனைத் தொடர்ந்து தனது படிப்பில் கவனம் செலுத்திவந்த நடிகை சாய் பல்லவி டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். பிறகு மலையாள சினிமாவில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து வெளியான பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகர் சாய் பல்லவி. இந்தப் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக இவர் நடித்து இருந்தாலும் இவரின் கதாப்பாத்திரம் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் சிலப் படங்களில் நடித்த சாய் பல்லவி அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிகமாக கவனம் செலுத்த தொடங்கினார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிகப் படங்களில் நடித்த சாய் பல்லவி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப் போட்டு நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாளும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இவரது நட்டிப்பிற்கு அதிக அளவில் ரசிகர்கள் இருப்பது போல நடனத்திற்கும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.




இந்தி சினிமாவில் கவனம் செலுத்தும் நடிகை சாய் பல்லவி:
தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வந்த நடிகை சாய் பல்லவி தற்போது பாலிவுட் பக்கமும் தனது கவனத்தை திருப்பியுள்ளார். அதன்படி தற்போது இந்தியில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது நடிகை சாய் பல்லவி ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார்.
இந்தி மொழியில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ராமராகவும் நடிகர் யாஷ் ராவனனாக நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோக்கள் வெளியாகி தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் இந்த ராமாயணா படத்தின் இரண்டு பாகங்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியாக உள்ளது. அதன்படி முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் வெளியாகும் என்று படக்குழு படப்பிடிப்பு தொடங்கும் போதே அறிவித்துவிட்டது.
Also read… ரஜினிகாந்த் தவிற வேறு எந்த தமிழ் நடிகரை பிடிக்கு… செய்தியாளரின் கேள்விக்கு தனுஷின் நச் பதில்!
இணையத்தில் கவனம் பெறும் நடிகை சாய் பல்லவியின் இன்ஸ்டாகிராம் பதிவு:
தொடர்ந்து இராமாயணா படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் நடிகை சாய் பல்லவி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராண்டமாக பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
நடிகை சாய் பல்லவி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
Also read… என் அண்ணன் எல்லாத்தையும் பாத்துபாருனு அப்போ நம்புனேன்… சூர்யா குறித்து நெகிழ்ந்து பேசிய கார்த்தி!