என் அண்ணன் எல்லாத்தையும் பாத்துபாருனு அப்போ நம்புனேன்… சூர்யா குறித்து நெகிழ்ந்து பேசிய கார்த்தி!
Actor Suriya: நடிகர் கார்த்தி தனது அண்ணன் நடிகர் சூர்யா தன் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருப்பார். அந்த வீடியோ இன்று நடிகர் சூர்யாவின் பிறந்த நாளில் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சினிமாவில் வாரிசு நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். வாரிசு நடிகர்களாக களம் இறங்கி சினிமாவில் சாதித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அந்த சாதித்தவர்களின் பட்டியளில் தமிழ் சினிமாவில் இடம் பிடித்தவர்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் மூத்த நடிகர் சிவக்குமாரின் மகன்கள் ஆவர். நடிகர் சூர்யா (Actor Suriya) சிவக்குமாரின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி தனது கடின உழைப்பாள் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி (Actor Karthi) சிவக்குமாரின் மகனாகவும் சூர்யாவின் தம்மியாகவும் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவரகாக வலம் வருகிறார். இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது அண்ணன் சூர்யா குறித்து முன்னதாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
இன்று சூர்யா தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா குறித்து பிரபலங்கள் முன்னதாக புகழ்ந்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.




அண்ணன் சூர்யா குறித்து நெகிழ்ந்து பேசிய நடிகர் கார்த்தி:
அந்த வரிசையில் நடிகர் சூர்யா குறித்து அவரது தம்பி நடிகர் கார்த்தி முன்னதாக நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பேசிய வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான போது நடிகர் சூர்யா இதனை தொகுத்து வழங்கி வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு நாள் ஒன்றில் கலந்துகொண்டு விளையாடிய நடிகர் கார்த்தி நிகழ்ச்சியின் இடையே தனது அண்ணன் சூர்யா குறித்து பேசியிருப்பார். அதில் தனது வாழ்க்கையில் அண்ணன் சூர்யா இருக்கார். தனக்காக எதுவேண்டுமானாலும் செய்வார். அவர் இருக்குறதுனால தனக்கு இனி எந்த பயமும் இல்லை என்று நினைத்தது பருத்தி வீரன் படத்தின் ரிலீஸின் போது என்று தெரிவித்து இருப்பார்.
Also read… மேரா பாய் இது நம்ம டைம்… அதிரடியான காட்சிகளுடன் வெளியானது கருப்பு படத்தின் டீசர்!
பருத்தி வீரன் படம் நடிகர் கார்த்தி நாயகனாக அறிமுகம் ஆன படம். அந்தப் படத்தின் அறிமுகத்தில் இருந்து படத்தின் வெளியீட்டிற்கும் தனது தம்பியின் அறிமுகத்திற்கும் பல உதவிகளை நடிகர் சூர்யா செய்தது குறித்தும் பேசியிருப்பார். இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
சூர்யாவின் பிறந்த நாளிற்கு வாழ்த்து தெரிவித்த கார்த்தி:
Happy birthday pa! With all my heart wishing you the BEST, Life can offer!!#Karuppu is gonna 💥 💥https://t.co/UMOtNRfzBN
— Karthi (@Karthi_Offl) July 23, 2025
Also read… நான் வீட்டில் துன்புறுத்தப்படுகிறேன்… விஷால் பட நடிகையின் வைரல் வீடியோ!