ரஜினிகாந்த் தவிற வேறு எந்த தமிழ் நடிகரை பிடிக்கு… செய்தியாளரின் கேள்விக்கு தனுஷின் நச் பதில்!
Actor Dhanush: நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகன் என்பது அனைவரும் அறிந்ததே. அதைத் தாண்டி நடிகர் தனுஷிற்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினிகாந்த் தான் என்பதும் அனைவரும் அறிந்த விசயம். இந்த நிலையில் ரஜினிகாந்த் தவிற வேற எந்த நடிகரை பிடிக்கும் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு தனுஷ் வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவர் அறிமுகம் ஆன போது இவரெல்லாம் நாயனகான என்று கிண்டலடிக்காதவர்கள் இல்லை. அப்படி நடிகர் தனுஷின் ஒல்லியான உடம்பை பார்த்து பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் நடிகர் தனுஷ் நடத்தின் பின்னி எடுப்பார். அவரது அறிமுகப் படங்களில் தனுஷின் நடனத்தைப் பார்த்து அனைவரும் மிரண்டுவிட்டனர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சிறப்பாக நடனம் ஆடுவார். நாயகனாக அறிமுகம் ஆன போது விமர்சனத்தை சந்தித்த தனுஷ் அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்ட போதும் சந்தித்தார். இவருக்கு சூப்பர் ஸ்டார் மாமனாரா என்றும் விமர்சித்தனர்.
இந்த நிலையில் 2004-ம் ஆண்டு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்து கொண்ட தனுஷ் 20 வருடங்களுக்குப் பிறகு இருவரும் ஒருமனதாக பிரிய முடிவு செய்துள்ளதாக அறிவித்து கடந்த ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்தைப் பெற்று பிரிந்தனர். ஆனால் இவர்களின் மகன்களின் விசயத்தில் இருவரும் இணைந்தே செயல்பட்டு வருகின்றனர்.




சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் தனுஷ்:
ஐஸ்வர்யாவை திருமணம் செய்வதற்கு முன்பும் சரி அந்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தபிறகும் சரி தனுஷ் ஒரு தீவிர ரஜினிகாந்த் பக்தன் என்பதை எப்போது நிரூபித்துக்கொண்டே இருப்பார். அப்படி இருக்கும் சூழலில் முன்னதாக பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷிடம் செய்தியாளர் ஒருவர் நடிகர் ரஜினிகாந்தை தவிற எந்த தமிழ் நடிகரை உங்களுக்கு பிடிக்கும் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய தனுஷ், தலைவரின் ரசிகன் எப்போதும் தலைவரின் ரசிகன் தான். அவருக்கு ஈடா அல்லது அவருக்கு அடுத்து என்று யாரும் இருக்க முடியாது. அது அவர் மட்டும் தான். இது தீவிர ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமே புரியும் என்று நடிகர் தனுஷ் பேசியிருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
Also read… மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படத்தின் கதை என்ன? இயக்குநர் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்
நடிகர் தனுஷின் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also read… தொடங்கியது தலைவன் தலைவி படத்தின் டிக்கெட் முன்பதிவு… படக்குழு கொடுத்த அப்டேட்!