தொடங்கியது தலைவன் தலைவி படத்தின் டிக்கெட் முன்பதிவு… படக்குழு கொடுத்த அப்டேட்!
Thalaivan Thalaivii Movie: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் தலைவன் தலைவி. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டதாக படக்குழு தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi) நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் தலைவன் தலைவி. நடிகை நித்யா மேனன் (Actress Nithya Menon) இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். இவர் முன்னதாக பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என தொடர்ந்து பல ஃபேமிலி செண்டிமெண்ட் படங்களை இயக்கியுள்ளார். இந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே போல மீண்டும் ஒரு ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கி உள்ளார் என்பது படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கும் போதே தெரியவந்துள்ளது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் யோகி பாபு, காளி வெங்கட், தீபா, ரோஷ்ணி ஹரிபிரியன், சரவணன், மைனா நந்தினி, ஆர்.கே.சுரேஷ், செம்பன் வினோத் ஜோஷ், செண்ட்ராயன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளது.




டிக்கெட் முன்பதிவை தொடங்கியது தலைவன் தலைவி படக்குழு:
இந்த நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த முரட்டுத்தனமான காதல் இப்போது உங்களுடையது என்று தெரிவித்துள்ளதுள்ளது. மேலும் அதில் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது டிக்கெட் புக்கிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. படம் வருகின்ற 25-ம் தேதி ஜூலை மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.
Also Read… நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியான மாதவனின் ஆப் ஜெய்சா கோய் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
தலைவன் தலைவி படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
This rugged romance is now yours!
🎟 Bookings now open for #ThalaivanThalaivii
Book now – https://t.co/evJgEVrCYM@VijaySethuOffl @MenenNithya @pandiraaj_dir @iYogiBabu @Music_Santhosh @Lyricist_Vivek @thinkmusicindia @studio9_suresh @Roshni_offl @kaaliactor @MynaNandhini… pic.twitter.com/VTppEypInR
— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 23, 2025
Also Read… Kingdom : விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? குஷியில் ரசிகர்கள்!