மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படத்தின் கதை என்ன? இயக்குநர் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்
Drishyam 3 Movie: இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே நடிகர் மோகன்லால் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் மோகன்லால் நடிப்பில் முன்னதாக இரண்டு பாகங்களாக வெளியான த்ரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

மோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மோகன்லால் (Actor Mohanlal). இவரது நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் த்ரிஷ்யம். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசஃப் (Director Jeethu Joseph) இயக்கி இருந்தார். இந்தப் படம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து இந்த த்ரிஷ்யம் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து ரீமேக் செய்து வெளியிட்டனர். படம் அந்த மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு த்ரிஷ்யம் படத்தில் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாவது பாகமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தமிழ் மொழியை தவிர்த்து தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படத்தின் இரண்டாவது பாகம் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. திரையரங்குகளில் வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் த்ரிஷ்யம் படத்தின் மூன்றாவது பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.




கடந்த காலம் ஒருபோதும் அமைதியாக இருக்காது:
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கடந்த காலம் ஒருபோதும் அமைதியாக இருக்காது என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட நடிகர் மோகன்லால் த்ரிஷ்யம் படத்தின் பணிகள் அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டில் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து படம் குறித்து படக்குழுவினர் அவ்வபோது பேட்டிகளில் தொடர்ந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இயக்குநர் ஜீத்து ஜோசஃப் விழா ஒன்றில் கலந்துகொண்டபோது த்ரிஷம் படத்தின் 3 வது பாகத்தில் கதை எப்படி இருக்கும் என்பது குறித்து பேசியிருந்தார்.
Also Read… குடும்பஸ்தன் படத்தில் முதலில் அந்த நடிகர்தான் நடிக்க வேண்டியது – நடிகர் மணிகண்டன் ஓபன் டாக்
நடிகர் மோகன்லால் த்ரிஷ்யம் குறித்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The Past Never Stays Silent
Drishyam 3 Confirmed!#Drishyam3 pic.twitter.com/xZ8R7N82un
— Mohanlal (@Mohanlal) February 20, 2025
அதில், படம் குறித்து எந்த ஸ்பாய்லர்களையும் தெரிவிக்காமல் இந்த முறை த்ரிஷ்யம் படத்தின் 3-வது பாகம் முழுக்க முழுக்க ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தை சுற்றியே இருக்கும் என்று தெரிவித்து இருந்தார். மேலும் ஜார்ஜ் குட்டியின் வாழ்க்கை அவரின் குழந்தைகள் வளர்ந்த பிறகு எப்படி இருப்பார்கள் என்பதே படத்தின் கதையாக இருக்கும் என்றும் ஜீத்து ஜோசஃப் அந்த விழாவில் தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
Also Read… ரிலீஸிற்கு முன்பே வெளீட்டு உரிமையில் லாபம் பார்க்கும் பைசன் காளமாடன்!