25 மில்லியன் பார்வைகளை கடந்த பராசக்தி படத்தின் டைட்டில் வீடியோ – படக்குழு வெளியிட்ட பதிவு
Sivakarthikeyan Parasakthi Movie: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பராசக்தி. அவரது 25-வது படமனா இதன் டைட்டில் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த வீடியோ தற்போது யூடியூபில் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan) நடிப்பில் இறுதியாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்து இருந்தார். படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக தனது 25-வது படத்திற்காக இயக்குநர் சுதா கொங்கரா (Director Sudha Kongara) உடன் கூட்டணி வைத்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டு வெளியான அந்த வீடியோ மூலம் படம் 80 காலகட்டதில் நடப்பது தெரியவந்தது. மேலும் படம் இந்தி எதிர்ப்பு கொள்கையை பேசுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.




25 மில்லியன் பார்வைகளை கடந்த பராசக்தி படத்தின் டைட்டில் டீசர்:
தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தின் டைட்டில் வீடியோ தற்போது யூடியூபில் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக தெரிவித்தது. இது தற்போது ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகின்றது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடித்து வருவது முன்னதாக டைட்டில் வீடியோ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் நேற்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான வீடியோவில் நடிகர் ராணா இந்தப் படத்தில் இணைந்து இருப்பதாக தெரிவியவந்துள்ளது. ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகும் மயக்கம் என்ன படத்தின் தெலுங்கு வெர்ஷன்!
பராசக்தி படத்தின் டைட்டில் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A striking force, a solid reach 🌟#Parasakthi title teaser crosses 25 million+ views on YouTube 🔥
🔗:-https://t.co/DM8za1QWDI@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14 @dop007 @editorsuriya pic.twitter.com/K1qNt9WrPw
— DawnPictures (@DawnPicturesOff) July 22, 2025
Also Read… நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியான மாதவனின் ஆப் ஜெய்சா கோய் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!