மீண்டும் ஒரு இயக்குநரை அறிமுகம் செய்யும் சிவகார்த்திகேயன் புரடெக்ஷன் – வைரலாகும் எக்ஸ் பதிவு!
Sivakarthikeyan Production Company 10th Movie Update: தமிழ் சினிமாவில் தொடர்ந்து நாயகனாக பல ஹிட் படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் படங்களை தயாரிப்பதிலும் வெற்றிநடை போடுகிறார். இந்த நிலையில் அடுத்ததாக அவர் தயாரிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து நாயகனாக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2018-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் புரடெக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் முதல் படமே அறிமுக இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கிய கனா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் நண்பர். தனது நண்பனின் இயக்குநர் கனவை நடிகர் சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்தார். அது அறிமுக இயக்குநரின் படமாக இருந்தாலும் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா மற்றும் டான் ஆகியப் படங்களின் இயக்குநர்களும் அறிமுக இயக்குநர்கள் என்பதே குறிப்பிடத்தக்கது.
இதில் டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அடுத்ததாக தலைவர் 173 படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தாய் கிழவி. இந்தப் படத்தினை எழுதி இயக்கிய சிவக்குமார் முருகேசன் அறிமுக இயக்குநர் ஆவர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாஅகி விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரிதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.




சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் 10-வது படத்தின் அப்டேட் வெளியானது:
இந்த நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் புரடெக்ஷன் சார்பாக உருவாக உள்ள படம் குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகும் 10-வது படம் என்றும் அந்தப் படத்தை இயக்குனர் அம்மாமுத்து சூர்யா இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு புதிய கதையை இந்த திரையுலகிற்கு கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த இயக்குனர் அம்மாமுத்து சூர்யா முன்னதாக நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜியை வைத்து ஹேப்பி என்ற படத்தை இயக்க இருந்தார். இந்தப் படத்தின் புரோமோ ஷூட்டிங் எல்லாம் முடிந்த பிறகு படத்தின் பணிகள் அடுத்தக்கட்டத்திற்கு செல்லாமல் அப்படியே நின்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் உருவாகி இருந்தால் இயக்குனர் அம்மாமுத்து சூர்யாவிற்கு அதுவே அறிமுகப் படமாக இருந்து இருக்கும். அது உருவாகாமல் போனதால் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படம் தான் இயக்குநராக அறிமுகம் ஆக உள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… முட்ட கலக்கி பாடலுக்கு இணைந்து நடனமாடிய அய்யனார் துணை சீரியல் நடிகர்கள் – காமெடியான வீடியோ!
சிவகார்த்திகேயன் புரடெக்ஷன்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Proudly introducing the director of our Production No.10 – @ammamuthu_surya. A unique voice bringing something fresh and exciting to the table ❤️@Siva_Kartikeyan | @KalaiArasu_ pic.twitter.com/s97D0LbgtI
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) March 11, 2026
Also Read… க்ரைம் த்ரில்லர் பாணியில் ஓடிடியில் வெளியான தடயம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ