மீண்டும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படத்தை இயக்கும் அருண் ராஜா காமராஜ் – ஹீரோ யார் தெரியுமா?
Arunraja Kamaraj: தமிழ் சினிமவில் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் இயக்குநர் அருண் ராஜா காமராஜ். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக இவரது இயக்கத்தில் வெளியாக உள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் அருண் ராஜா காமராஜ் (Director Arun Raja Kamaraj). இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கனா. இந்தப் படத்தை எழுதி இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் சிவகார்த்திகேயன், சத்யராஜ், தர்ஷன், ராமா, இளவரசு, ராம்தாஸ், காளி பிரசாத் முகர்ஜி, நமோ நாராயணா, பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், வணக்கம் கந்தசாமி, சீனு வாசன், சேதுபதி, சவரி முத்து, ஆண்டனி பாக்யராஜ்,
அசோக் குமார், குணா, சத்யா என்.ஜே. அருவி பாலாஜி, பிரதீப் துரைராஜ், சிவமாறன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெச்சுக்கு நீதி மற்றும் லேபில் என்ற இணையதள தொடரும் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் என்ன படம் வெளியாகும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்தனர்.




விஷ்ணு விஷாலை இயக்கும் அருண் ராஜா காமராஜ்:
இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் அவர் நடிக்கும் அடுத்தப் படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாகவது இயக்குநர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஒரு ஸ்போர்ஸ்ட் ட்ராமா படத்தில் நடிக்க உள்ளதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து இந்தப் படத்திற்காக தான் காத்திருப்பதாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் உருவாகும் புது படம் அனந்தா – வெளியானது அப்டேட்!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#VishnuVishal — “ My Next Film With #ArunrajaKamaraj is a Sports Film🔥 It’s A Physically Demanding Film👌🏽 ”
Now Can’t Wait For This Film!! pic.twitter.com/fNti9JoiDi
— Saloon Kada Shanmugam (@saloon_kada) November 1, 2025
Also Read… அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள தலவரா படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ