சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் உருவாகும் புது படம் அனந்தா – வெளியானது அப்டேட்!
Anantha Movie: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்சா படத்தை இயக்கியதன் மூலம் பான் இந்திய அளவில் பிரபலமான இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
பான் இந்திய அளவில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா (Director Suresh Krishna). தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் முன்னணி நாயகன்கள் பலரை வைத்து படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. அதன்படி தமிழில் கே.பாலசந்தரின் உதவி இயக்குநராக பணியாற்றி வந்த சுரேஷ் கிருஷ்ணா கடந்த 1988-ம் ஆண்டு நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான சத்யா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தை கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஸ்னல் நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
அதனை தொடர்ந்து இவரது இயக்கத்தில் தொடர்ந்து வெளியான ராஜா கைய வச்சா, அண்ணாமலை, பாட்சா, சங்கமம், ஆழவந்தான், பாபா, கஜேந்திரா என தொடர்ந்து பல படங்களை முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இவரது இயக்கத்தில் படம் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் படம் தயாராக உள்ளது குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.




சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் உருவாகும் புது படம்:
அதன்படி இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக உள்ள படத்திற்கு அனந்தா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் ஆன்மீகத்தை மையமாக வைத்து உருவாக உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஜகபதிபாபு மற்றும் சுஹாசினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் நடிக்க உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஓர் ஆண்டுகளை நிறைவு செய்தது அமரன், லக்கி பாஸ்கர் – ஜிவி பிரகாஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவு!
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Presenting the first look of #Anantha — a tale of love, longing, and destiny that transcends lifetimes. ❤️
Best wishes @Suresh_krissna Sir @ungaldevaoffL Sir @IamJagguBhai Sir @hasinimani Mam
And the entire team 👍 👍👍
@YGMadhuvanthi @pavijaypoet @RichardEditor… pic.twitter.com/PROSCwHUBi
— karthik subbaraj (@karthiksubbaraj) November 1, 2025