பிக்பாஸில் வாரம் முழுவதும் கத்திக்கொண்டே இருந்த போட்டியாளர்கள் – விஜய் சேதுபதி எடுத்த சூப்பர் ரிவெஞ்ச்
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை விஜய் சேதுபதி வரும் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 4-வது வாரம் ஆகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி வந்து போட்டியாளர்களின் நிறை குறைகளை எழுத்து கூறிவருகிறார். அதன்படி முந்தைய சீசன்களில் இருக்கும் போட்டியாளர்கள் வார இறுதியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறும் விமர்சனத்தை மனதில் வைத்து அடுத்த வாரம் போட்டியில் கலந்துகொள்வார்கள். அவர்களின் விளையாட்டில் மாற்றம் தெரியும். ஆனால் இந்த 9-வது சீசனில் தான் தொடர்ந்து விஜய் சேதுபதி உயிர் போக கத்தினாலும் எதையும் காதில் வாங்காமல் நீ என்ன சொல்வது நான் என்ன செய்வது என்று தொடர்ந்து அவர்கள் நினைத்ததை செய்து வருகிறார்கள். அதன்படி இந்த வாரமும் முழுவதும் நிகழ்ச்சியை பார்க்கவே முடியவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கும் வகையில் மிகவும் மோசமாக இருந்தது என்றே சொல்லலாம்.
கடந்த வாரம் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை குழந்தைகளுடன் பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவிப்பதாக வெளிப்படையாகவே கூறினார். ஆனால் அது எதையும் ஒரு சிரிய அளவில் கூட பொருட்படுத்தாமல் இந்த வாரமும் பல கலேபரமான விசயங்களை செய்யவும் அடல்ட் காமெடிகளையும் விசயங்களையுமே செய்து வந்தனர். மேலும் இந்த வாரம் முன்பு இல்லாத அளவிற்கு நிகழ்ச்சியை பார்க்கவே முடியாத அளவிற்கு போட்டியாளர்கள் சண்டையிட்டுக் கொண்டும் கத்திக்கொண்டும் இருந்தனர். இதன் காரணமாக இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.




பிக்பாஸில் வாரம் முழுவதும் கத்திக்கொண்டே இருந்த போட்டியாளர்கள்:
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 27-வது நாளை எட்டியுள்ளது. இன்று சனி கிழமை என்பதால் விஜய் சேதுபதி வருகிறார். அதன்படி வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகளை கேட்க முடியாமல் காதில் கைவைத்து ரசிகர்களின் கருத்தை வெளிப்படுத்தும் விதமாக கத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வெளியான புரோமோ வீடியோவில் வீட்டில் உள்ளவர்களிடம் மெகாபோன் ஸ்பீக்கரை வைத்து பேசுகிறார். மேலும் வாரம் முழுவதும் நீங்கள் கத்திக்கொண்டே இருந்தது இப்படிதான் ரசிகர்களை கடுப்பாக்கியது என்றும் தெரிவித்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 47 படத்தின் பணிகள்… வைரலாகும் அப்டேட்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day27 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/xYVsbjAFYp
— Vijay Television (@vijaytelevision) November 1, 2025
Also Read… மகாராஜா படத்தில் நடிக்க தேர்வானது இப்படிதான் – நடிகர் நட்டி நடராஜன் ஓபன் டாக்