மகாராஜா படத்தில் நடிக்க தேர்வானது இப்படிதான் – நடிகர் நட்டி நடராஜன் ஓபன் டாக்
Actor Natty Natarajan : சினிமாவில் ஒளிபதிவாளராக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகை நட்டி நடராஜன். இவர் தொடர்ந்து வில்லன் குணசித்திரம் என பல க்தாப்பாத்திரங்களை ஏற்று தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.
நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நாயகனாக நடித்து கடந்த 14-ம் தேதி ஜூன் மாதம் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் மகாராஜா. நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமான இதனை இயக்குநர் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் அனுராக் காஷ்யப், சாச்சனா நமிதாஸ், குழந்தை ஷினிகா, மம்தா மோகன்தாஸ், நட்டி சுப்ரமணியம், அபிராமி, திவ்யபாரதி, சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், வினோத் சாகர், மணிகண்டன், காளையன், கல்கி ராஜா, பி.எல்.தேனப்பன், சரவண சுப்பையா, வெற்றிவேல் ராஜா, பாரதிராஜா, மோகன் ராமன், பூவையார், லிசி ஆண்டனி, போஸ்டர் நந்தகுமா, ஸ்ரீஜா ரவி, பிச்சைக்காரன் மூர்த்தி, சங்கீதா வி., சூப்பர் குட் சுப்ரமணி, முல்லை அரசி, பிரதீப் கே விஜயன், வணக்கம் கந்தசாமி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
பிரபல தயாரிப்பு நிறுவனங்களான தி ரூட், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் தமிழ் நாடு மட்டும் இன்றி சீனாவில் அதிக மக்களால் பாராட்டப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஜா படத்தில் நடிக்க தேர்வானது இப்படிதான்:
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் நட்டி நடராஜன் காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்தார். அதன்படி இந்தப் படத்தில் அவர் எப்படி நடிக்க தேர்வானார் என்பது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். அதில் அவர் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை முன்பே ஒரு நடிகர் மூலம் அறிமுகம் ஆனது குறித்து தெரிவித்து இருந்தார்.
அப்போது நித்திலன் குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கி வந்தார். அந்தப் படத்தின் கதையை நித்திலன் கூறியபோது எனக்கு மிகவும் பிடித்து. மேலும் தியேட்டரில் அந்தப் படம் வெளியான போது பார்த்துவிட்டு நித்திலனை அழைத்து பாராட்டினேன். அதன் பிறகு மகாராஜா படத்திற்காக நித்திலன் என்னை சந்தித்தார். அப்போது கதையை கேட்ட உடனே இந்தப் படத்தில் நிச்சயமாக நடிப்பேன் என்று கூறிவிட்டேன் என்று நடிகர் நட்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 47 படத்தின் பணிகள்… வைரலாகும் அப்டேட்
நடிகர் நட்டி நடராஜன் அளித்தப் பேட்டி:
View this post on Instagram
Also Read… மம்முட்டியின் கன்னூர் ஸ்குவார்ட் படத்தை புகழ்ந்து பேசிய விஷ்ணு விஷால்



