மம்முட்டியின் கன்னூர் ஸ்குவார்ட் படத்தை புகழ்ந்து பேசிய விஷ்ணு விஷால்
Actor Vishnu Vishal: நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஆர்யன். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
மலையாள சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கன்னூர் ஸ்குவார்ட் (Kannur Squad). இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள நிலையில் படத்தின் திரைக்கதையை முகமது ஷாஃபி மற்றும் ரோனி டேவிட் ராஜ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி உடன் இணைந்து நடிகர்கள் அஸீஸ் நெடுமங்காடு, ரோனி டேவிட் ராஜ், ஷபரீஷ் வர்மா, அங்கித் மாதவ், கிஷோர், விஜயராகவன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், துருவன், தீபக் பரம்போல், சன்னி வெய்ன், சரத் சபை, அஃப்சானா லட்சுமி, மனோஜ் கே.யு., ரேஷ் லம்பா, நல்னீஷ் நீல். ஷைன் டாம் சாக்கோ, சிவதாஸ் கண்ணூர், முல்லை அரசி, சஜின் செருகாயில், ஷெபின் பென்சன், எஸ்.பி.ஸ்ரீகுமார், மனோகர் பாண்டே, சுஸ்மிதா சுர், சரஸ்வத் பாண்டே, ஜிபின் கோபிநாத், பென்சி மேத்யூஸ், செஜு கே. ஈபன்,
அனூப் திரிவேதி, அவினாஷ் பாண்டே, கேத்தரின் மரியா என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பனி சார்பாக நடிகர் மம்முட்டியே இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு பின்னணி இசையை சுஷின் ஷ்யாம் இசையமைத்து இருந்தா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




கன்னூர் ஸ்குவார்ட் படத்தை புகழ்ந்து பேசிய விஷ்ணு விஷால்:
நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் மலையாள சினிமா தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்து இருந்தார். குறிப்பாக மலையாள சினிமாவில் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான கன்னூர் ஸ்குவார்ட் படம் பிடிக்கும் என்றும் இந்தப் படத்தில் இருந்து சில காட்சிகள் இன்ஸ்பயர்ட் ஆகி ஆர்யன் படத்தில் பயன்படுத்தியுள்ளதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
Also Read… பிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய் சேதுபதி – வைரலாகும் தகவல்
நடிகர் விஷ்ணு விஷாலின் சமீபத்திய எக்ஸ் தள பதிவு:
Four to floor.
The lightest pages reveal the darkest truths.#Aaryan pic.twitter.com/m0BGnRcegQ— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) October 27, 2025
Also Read… ஜீனி படத்தின் அப்தி அப்தி 18 மில்லியன் பார்வைகளைக் கடந்தது