WIth Love Movie: ‘வித் லவ்’ பட ரிலீஸ்.. திரையரங்கில் அலைமோதும் ரசிகர்கள் கூட்டம் – வைரலாகும் வீடியோ!
Fans celebrate With Love Movie: தமிழில் அறிமுக இயக்குநராக நுழைந்து, தற்போது வித் லவ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியள்ளவர் அபிஷன் ஜீவிந்த். இவரின் வித் லவ் படமானது இன்று 2026 பிப்ரவரி 6ம் தேதியில் வெளியாகியுள்ள நிலையில், பிரபல திரையரங்கில் இப்படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அறிமுக இயக்குநர் மதன் (Madhan) இயக்கத்தில் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் (Soundarya Rajinikanth) தயாரிப்பில் மிக பிரம்மாண்டமான ஃபீல் குட் திரைப்படமாக வெளியாகியிருப்பது வித் லவ் (With Love). இப்படத்தில் டூரிஸ்ட் பேமிலி (Tourist family) பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth) கதாநாயகனாக நடித்துள்ளார், இப்படத்தின் மூலமாக தமிழில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் (Anaswara rajan) நாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது பள்ளிப்பருவ காதல் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், இன்று 2026 பிப்ரவரி 6ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பிரீமியர் காட்சி கடந்த 2026 பிப்ரவரி 3ம் தேதியில் வெளியிடப்பட்ட நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் இன்று உலகமெங்கும் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியிலும் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் FDFS காட்சியை காண்பதற்கு, சென்னையில் உள்ள கமலா திரையரங்கு முன் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: தளபதி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ‘ஜன நாயகன்’ பட ரிலீஸில் புது திருப்பம்!
வித் லவ் படத்தை காண வந்த ரசிகர்கள் கூட்டம் தொடர்பான வீடியோ பதிவு:
#WithLove – Houseful FDFS at Kamala Cinemas..💥 Dream Debut for #AbishanJeevinth ..🤝pic.twitter.com/fVEXfmkUju
— Laxmi Kanth (@iammoviebuff007) February 6, 2026
வித் லவ் படத்திற்கு வரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் :
இந்த வித் லவ் படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கியிருந்த நிலையில், அறிவித்த 45 நாட்களிலே இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிட்டது. அந்த விதத்தில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்திலிருந்து வெளியான பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதையும் படிங்க: ‘வித் லவ்’ பட ரிலீஸ்.. பாடலை பாடி படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த லதா ரஜினிகாந்த்!
இந்த இந்த படமானது தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. அபிஷன் ஜீவிந்திற்கு ஹீரோவாக இது நல்ல ஓப்பனிங் படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தை அடுத்ததாக அவர் ஹீரோவாகவே படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும் இயக்குவதில் ஆர்வமாக இருக்கும் அபிஷன் ஜீவிந்த், தனது அடுத்த இரு திரைப்படங்கள் மிக பிரம்மாண்டமான கலக்கல் படமாக இருக்கும் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.