Jana Nayagan: தளபதி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ‘ஜன நாயகன்’ பட ரிலீஸில் புது திருப்பம்!
Thalapathy Vijays Jana Nayagan: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் தளபதி விஜய். இவரின் ஜன நாயகன் படமானது சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் தற்போது வெளிநாட்டு பட விநியோக நிறுவனம், இதன் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளது.
கோலிவுட் சினிமாவின் முன்னணி நாயகனாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவர் தற்போது முழுமையாக அரசியலில் இறங்கியுள்ள நிலையில், இவரின் நடிப்பில் கடைசி திரைப்படமாக ஜன நாயகன் (Jana Nayagan) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை இயக்குநர் எச்.வினோத் (H. Vinoth) இயக்க, கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகர்கள் தளபதி விஜய், மமிதா பைஜூ (Mamitha Baiju), பூஜா ஹெக்டே (Pooja Hegde), பாபி தியோல் மற்றும் நரேன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் முதலில் 2026 ஜனவரி 9ம் தேதியில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்த நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இன்னும் இதன் சென்சார் பிரச்சனை (Censor problem) முடிவிற்கு வராத நிலையில், படக்குழு தொடர்ந்த வழக்கை திரும்பப்பெறுவதாக வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தும் வருகின்றனர். அந்த விதத்தில் தற்போது தளபதி விஜய்யின் இப்படத்தின் புது ரிலீஸ் தேதியை, வெளிநாட்டு பட விநியோக நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது.




இதையும் படிங்க: ‘வித் லவ்’ பட ரிலீஸ்.. பாடலை பாடி படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த லதா ரஜினிகாந்த்!
தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் புது ரிலீஸ் தேதி:
தளபதி விஜய்யின் இப்படமானது பெண் பாதுகாப்பு மற்றும் அரசியல் கதைக்களத்தில் அமைந்திருக்கும் நிலையில், இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக பிரம்மாண்டமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் ரிலீஸிற்கு ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், சினி வேல்ட் என்ற லண்டன் டிக்கெட் விநியோக நிறுவனம் ஒன்று, ஜன நாயகன் படமானது வரும் 2026 பிப்ரவரி 20ம் தேதியில் வெள்ளிக்கிழமையில் வெளியாகுவதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்தப் படம் குறித்து சிவகார்த்திகேயன் சொன்ன மாஸ் அப்டேட்
ஜன நாயகன் பட ரிலீஸ் தேதி குறித்து வைரலாகும் பதிவு:
— The new cut of #JanaNayagan is ready.
— After completing the required formalities, KVN Productions is set to file a petition to withdraw the case.
— The film is expected to hit screens on Friday, February 20, 2026 – the overseas is distributors has confirmed the release… pic.twitter.com/XzduvwQlek
— Movie Tamil (@_MovieTamil) February 6, 2026
ஆனால் இன்னும் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஜன நாயகன் படக்குழு எந்த தகவல்களையும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வெளியாகிவரும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இந்த தகவல் உண்மையாகிவிடவேண்டும் எனவும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர். விரைவில் ஜன நாயகன் படத்தின் புது ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகும் என ஒட்டுமொத்த தளபதி ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.