பிரபல இயக்குநருடன் இணையும் நடிகர் விஜய் சேதுபதி – வைரலாகும் தகவல்
Vijay Sethupathi: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக விஜய் சேதுபதி யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து தற்போது கோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி தற்போது தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. மேலும் படங்களில் நடிப்பதற்கு இடையே பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி ட்ரெய்ன் மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் படங்களில் தொடர்ந்து அடுத்தடுத்து நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக எந்த இயக்குநருடைய படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




இயக்குநர் சிறுத்தை சிவா உடன் இணையும் விஜய் சேதுபதி:
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. தமிழில் சிறுத்தை படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார். இதன் காரணமாகவே தமிழ் ரசிகர்களிடையே இவர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்படுகிறார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் சிவா இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி உடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பிக்பாஸ் வீட்டிற்குள் வெடிக்கும் சண்டை… விஜய் சேதுபதி அதிரடி முடிவு!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#VijaySethupathi is acting in a film directed by #SiruthaiSiva. The film is produced by #GnanavelRaja.
Official Announcement Coming 🔜 pic.twitter.com/Q1ad7v9w3Q
— Movie Tamil (@_MovieTamil) October 26, 2025