Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

25 மில்லியன் பார்வைகளைக் கடந்தது அரசன் படத்தின் ப்ரோமோ வீடியோ – நெகிழ்ந்த சிலமபரசன்

Vetri Maarans Arasan Movie Official Promo Video Tamil | நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தற்போது அடுத்தடுத்து மூன்று படங்கள் உருவாகி வருகின்றது. இதில் இவரது நடிப்பில் உருவாகி வரும் அரசன் படத்தின் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

25 மில்லியன் பார்வைகளைக் கடந்தது அரசன் படத்தின் ப்ரோமோ வீடியோ – நெகிழ்ந்த சிலமபரசன்
அரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Oct 2025 18:46 PM IST

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிலம்பரசன் (Actor Silambarasan). இவரது தந்தை டி.ராஜேந்திரன் தமிழ் சினிமாவில் எப்படி நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மையோடு வலம் வந்தாரோ அதே போல நடிகர் சிலமபரசனும் நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மையோடு வலம் வருகிறார். சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வைத்துள்ள நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் இறுதியாக நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியகாவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் அடுத்தடுத்து 3 படங்கள் தயாராக உள்ளது குறித்த அறிவிப்பு வெளியானது. இது சிம்புவின் பிறந்த நாள் அன்று அவரது ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி அந்த மூன்று படங்களில் ஒன்று இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்க உள்ளது குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அரசன் படத்தின் ப்ரோமோ வீடியோவிற்கு கிடைத்த வரவேற்பு:

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் அரசன் படத்தின் ப்ரோமோ வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தப் படம் வட சென்னையில் நடைப்பெற்ற ஒரு கொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் நடிகர் சிம்புவின் நடிப்பு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்தப் ப்ரோமோ வீடியோ தற்போது யூடியூபில் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இது குறித்து சிலம்பரசன் கூறியதாவது, அரசன் படத்தின் ப்ரோமோ வீடியோவிற்கு உங்களின் அன்பிற்கு மனதின் ஆழத்தில் இருந்து நன்றியையும் காதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

Also Read… ஒவ்வொரு படத்திலும் மாரி செல்வராஜின் வளர்ச்சியை பார்க்க முடிகிறது – பைசன் படத்தைப் பாராட்டிய தயாரிப்பாளர்!

நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2 படங்கள் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த செல்வராகவன்