Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஒவ்வொரு படத்திலும் மாரி செல்வராஜின் வளர்ச்சியை பார்க்க முடிகிறது – பைசன் படத்தைப் பாராட்டிய தயாரிப்பாளர்!

Producer SR Prabhu: தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. இவரது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பைசன் காளமாடன் குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

ஒவ்வொரு படத்திலும் மாரி செல்வராஜின் வளர்ச்சியை பார்க்க முடிகிறது – பைசன் படத்தைப் பாராட்டிய தயாரிப்பாளர்!
மாரி செல்வராஜ் - எஸ்.ஆர்.பிரபுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Oct 2025 13:03 PM IST

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தனது தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மூலம் தயாரித்தவர் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு (Producer SR Prabhu). இவரது தயாரிப்பில் வெளியான ஜோக்கர், காஷ்மோரா, அருவி, கூட்டத்தின் ஒருவன், தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசி, கைதி, சுல்தான், வட்டம், ஃபர்கானா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடர்ந்து பல ஹிட் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தற்போது இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படத்தை தயாரித்து வருகின்றார். சூர்யாவின் நடிப்பில் 45-வது படமாக உருவாகி வரும் இந்த கருப்பு படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சமீபத்தில் கருப்பு படத்தின் முதல் சிங்கிள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

பைசன் படத்தையும் இயக்குநர் மாரி செல்வராஜையும் வெகுவாகப் பாராட்டிய எஸ்.ஆர்.பிரபு:

தொடர்ந்து படங்களை தயாரிப்பதில் பிசியாக இருக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்த பைசன் படத்தைப் பார்த்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இயக்குநர் மாரி செல்வராஜின் வளர்ச்சியை ஒவ்வொரு படத்திற்கு படம் அதிகரிப்பதை ஒரு படைப்பாளியாக பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் படத்தில் வேலை செய்த அனைத்து குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்த எக்ஸ் தள பதிவில் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… உலக அளவில் ரூபாய் 35 கோடிகளை வசூலித்த பைசன் காளமாடன் – உற்சாகத்தில் படக்குழு

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 30 ஆண்டுகளை நிறைவு செய்தது கமல் ஹாசனின் சூப்பர் ஹிட் குருதிப்புனல் படம்