30 ஆண்டுகளை நிறைவு செய்தது கமல் ஹாசனின் சூப்பர் ஹிட் குருதிப்புனல் படம்
30 Years of Kuruthipunal Movie: உலக நாயகன் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான பலப் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேறபைப் பெற்று வருகின்றது. மேலும் தொடர்ந்து சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கமல் ஹாசனின் நடிப்பில் வெளியான குருதிப்புனல் படம் இன்றுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல் ஹாசன் (Actor Kamal Haasan). இவரது நடிப்பில் பல நூறு படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 23-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1995-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானப் படம் குருதிப்புனல். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது. மேலும் இதனை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தை இயக்குநர் பி.சி.ஸ்ரீராம் இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு நடிகர் கமல் ஹாசனே திரைக்கதை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் உடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன், நாசர், கௌதமி, கீதா, நிழல்கள் ரவி, கே. விஸ்வநாத், அஜய் ரத்னம், சுபலேகா சுதாகர், சப் ஜான், அரவிந்த் கிருஷ்ணா, அனுஷா என பலர் இந்தப் படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக நடிகர் கமல் ஹாசன் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
30 ஆண்டுகளை நிறைவு செய்தது குருதிப்புனல் படம்:
காவல்துறை அதிகாரிகளாக இருக்கும் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் அர்ஜுன் இருவரும் ஒரு தீவிரவாத கும்பளை பிடிப்பதற்காக ஆப்ரேஷன் ஒன்றை நடத்துகின்றனர். இதற்கு இடையில் மத்திய அமைச்சரை கொலை செய்ய தீவிரவாத கும்பல் திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த அனைத்துப் பிரச்னைகளையும் அவர்கள் எப்படி தீர்க்கிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 30 ஆண்டுகளைக் கடந்துள்ளது குறித்து படக்குழு தங்களது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பிக்பாஸ் வீட்டில் ரூல்ஸை ஃபாலோ பண்ணாத பார்வதி… கடுப்பான வீட்டு தல கனி
குருதிப்புனல் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
30 years of #Kuruthipunal A film that stood for bravery, truth, and sacrifice — then, now, and always #30YearsOfKuruthipunal #KamalHaasan@ikamalhaasan @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/6wnHbAosvD
— Raaj Kamal Films International (@RKFI) October 23, 2025
Also Read… உலக அளவில் ரூபாய் 35 கோடிகளை வசூலித்த பைசன் காளமாடன் – உற்சாகத்தில் படக்குழு