ஒரே நாளில் ரூ.5,040 உயர்ந்த தங்கம்.. ரூ.20,000 உயர்ந்த வெள்ளி.. பொதுமக்கள் ஷாக்!
Gold and Silver Price Hiked In Chennai | சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று (பிப்ரவரி 04, 2026) மிக கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, பிப்ரவரி 04 : சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) விலை மிக கடுமையான சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று (பிப்ரவரி 04, 2026) கடும் உயர்வை சந்தித்துள்ளது. அதாவது சென்னையில் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.630 மற்றும் வெள்ளி கிராமுக்கு ரூ.20 உயர்ந்தும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் சரிவை சந்தித்த தங்கம் மற்றும் வெள்ளி
2026 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது ஜனவரி 29, 2026 அன்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரு கிராம் தங்கம் ரூ.17,000-த்தை நெருங்கியும், ஒரு கிராம் வெள்ளி ரூ.425-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நீண்ட நாடகள் இதே விலை நீடிக்கவில்லை. கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான சரிவை சந்தித்தது. குறிப்பாக பிப்ரவரி 02, 2026 அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது தங்கம் மற்றும் வெள்ளி இரண்டுமே விலை உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி.. குறைந்த வரி லிஸ்டில் இந்தியா




மீண்டு உயர்வை நோக்கி செல்லும் தங்கம்?
| தேதி | ஒரு கிராம் | ஒரு சவரன் |
| 26 ஜனவரி 2026 | ரூ.15,025 | ரூ.1,20,200 |
| 27 ஜனவரி 2026 | ரூ.14,960 | ரூ.1,19,680 |
| 28 ஜனவரி 2026 | ரூ.15,610 | ரூ.1,24,880 |
| 29 ஜனவரி 2026 | ரூ.16,800 | ரூ.1,34,400 |
| 30 ஜனவரி 2026 | ரூ.15,850 | ரூ.1,26,800 |
| 31 ஜனவரி 2026 | ரூ.14,900 | ரூ.1,19,200 |
| 01 பிப்ரவரி 2026 | ரூ.14,900 | ரூ.1,19,200 |
| 02 பிப்ரவரி 2026 | ரூ.13,950 | ரூ.1,11,600 |
| 03 பிப்ரவரி 2026 | ரூ.14,270 | ரூ.1,14,160 |
| 04 பிப்ரவரி 2026 | ரூ.14,900 | ரூ.1,19,200 |
ஜனவரி 30, 2026 முதல் தங்கம் மெது மெதுவாக விலை குறைந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் விலை உயர்ந்து வருகிறது.
இதையும் படிங்க : ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயரும் பிஎஃப் உச்ச வரம்பு?.. வெளியான முக்கிய தகவல்!
ஒரே நாளில் ரூ.5,040 உயர்ந்த தங்கம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,900-க்கும், சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.320-க்கும், ஒரு கிலோ ரூ.3,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.