Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு செக்.. பட்ஜெட்டில் ஷாக் கொடுத்த நிர்மலா சீதாராமன்!

New Rules and Penalties Implemented On Crypto Investment | நேற்று (பிப்ரவரி 01, 2026) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில், கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு செக்.. பட்ஜெட்டில் ஷாக் கொடுத்த நிர்மலா சீதாராமன்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Feb 2026 15:16 PM IST

2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் (2026 – 2027 Union Budget) நேற்று ([பிப்ரவரி 01, 2026) தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அந்த வகையில், கிரிப்டோ கரன்சியில் (Crypto Currency) முதலீடு செய்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக கிரிப்டோ முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த நிலையில், கிரிப்டோ முதலீடு குறித்து நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எச்சரிக்கைகளுக்கு பிறகும் கிரிப்டோவில் முதலீடு செய்யும் பொதுமக்கள்

மத்திய அரசு மிக கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் எச்சரிக்கைகளை விடுத்திருந்த போதிலும், ஏராளமான பொதுமக்கள் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து வருகின்றனர். இவ்வாறு எச்சரிக்கைகளை மீறியும் கிரிப்டோவில் முதலீடு செய்யப்படும் நிலையில், கிரிப்டோ முதலீட்டு சந்தையை ஸ்ட்ரீம்லைன் செய்ய திட்டமிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் இந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க :பட்ஜெட் 2026 : நிர்மலா சீதாராமன் அறிவித்த டாப் 10 அறிவிப்புகள் இவைதான்!

கடுமையான அபராத விதிகளை அறிவித்த நிதியமைச்சர்

கிரிப்டோ கரன்சி மற்றும் விர்ச்சுவல் டிஜிட்டல் அசெட்ஸ் (VDA – Virtual Digital Assets) ஆகியவற்றில் முதலீடு செய்தவர்கள் முறையாக அரசுக்கு ஸ்டேட்மெண்ட் வாயிலாக அறிக்கை தாக்கல் செய்யாதவர்கள் அல்லது தவறான தகவல் அளிப்பவர்களுக்கு கடுமையான அபராத விதிகள் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கிரிப்டோ வர்த்தகம் மற்றும் முதலீடு இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பரவலாக உள்ள நிலையில், மத்திய அரசு இந்த கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை.. பட்ஜெட்டில் அறிவிப்பு

வருமான வரி தாக்கல் தொடர்பான அபராதங்கள்

பட்ஜெட் அறிவிப்பின் படி, வருமான வரிச் சட்டம் 2025 பிரிவு 509-ன் கீழ் வருமான வரி (Income Tax) அறிக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு தினசரி ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவே தவறான தகவல் அளித்தால் ரூ.50,000 அபராதமும், தவறை சரி செய்ய தவறினால் அதற்கு கூடுதலாக தண்டையும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.