Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி ஏடிஎம் மையங்களில் ரூ.10, ரூ.50 நோட்டுகளை பெறலாம்.. மத்திய அரசின் சோதனையில் அசத்தல் திட்டம்!

People Can Get 10 and 50 Rupees Notes From ATM Machines | தற்போதைய சூழலில் ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.100, ரூ.200, ரூ.500 என அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை மட்டுமே எடுக்கும் வசதி உள்ளது. இந்த நிலையில், விரைவில் சிறிய மதிப்புள்ள நோட்டுக்களை பெறும் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இனி ஏடிஎம் மையங்களில் ரூ.10, ரூ.50 நோட்டுகளை பெறலாம்.. மத்திய அரசின் சோதனையில் அசத்தல் திட்டம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Jan 2026 13:31 PM IST

சென்னை, ஜனவரி 30 : தற்போது நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்களில் ரூ.100, ரூ.200, ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே கிடைக்கின்றன. இதன் காரணமாக சில்லறை கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டு வரும் நிலையில், மத்திய அரசு அதற்கு ஒரு அசத்தல் தீர்வை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது, இனி ஏடிஎம் மையங்களில் ரூ.10 மற்றும் ரூ.50 நோட்டுக்கள் கிடைக்க வழிவகை செய்யும் முக்கிய நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏடிஎம் மையங்களில் சிரமங்களை சந்திக்கும் கிராமப்புற மக்கள்

பொதுமக்கள் தங்களது பண தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்துக்கொள்ள குறிப்பிட்ட இடைவெளிகளில் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வங்கிக்கு சென்று படிவத்தை நிரப்பி, சிறுது நேரம் செலவிட்டு பணம் எடுப்பதற்கு பதிலாக விரைவாக பணம் எடுக்க ஏடிஎம் மையங்கள் பெரும் உதவி செய்கின்றன. ஆனால், முன்பை போல் இல்லாமல் நகரங்களில் ஏடிஎம் மையங்களின் தேவை குறைந்துள்ளது.

இதையும் படிங்க : ஆதார் செயலி மூலமே முகவரி, மொபைல் எண்ணை சுலபமாக மாற்றலாம்.. எப்படி தெரியுமா?

பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் யுபிஐ மற்றும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை அதிகம் பயன்படுத்தும் நிலையில், ஏடிஎம் மையங்களுக்கான தேவை குறைந்துள்ளது. ஆனால், கிராமப்புற மக்களுக்கு பண தேவை இருந்துக்கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 என குறைந்த அளவிலான பணம் தான் அதிகம் தேவைப்படுகிறது. இந்த நிலையில், சில்லறை கிடைக்காமல் அவர்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வர உள்ள அசத்தல் திட்டம்

இந்த நிலையில், ரூ.500 மற்றும் ரூ.200 நோட்டுகளை கொடுத்து சிறிய மதிப்புள்ள நோட்டுகளை பெறும் வகையில் ஹைப்ரிட் ஏடிஎம் (Hybrid ATM) மையங்களை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டம் தற்போது மும்பையில் சோதனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் வெற்றிபெறும் பட்சத்தில் பணப் பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெறக் கூடிய உள்ளூர் சந்தைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ள இடங்களில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.