Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Bank Holiday : பிப்ரவரியில் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!

February Bank Holidays List | ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறைகள், பண்டிகைகள் காரணமாக வங்கிகளுக்கு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் 2026, பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ஐந்து நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

Bank Holiday : பிப்ரவரியில் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Jan 2026 12:13 PM IST

2026, பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை (Bank Holiday) பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) வெளியிட்டுள்ளது. வழக்கமாக வார விடுமுறை, பண்டிகைகள் மற்றும் அரசு விடுமுறைகளின் போது வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ஐந்து நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் பெரிதாக அரசு விடுமுறை, பண்டிகைகள் எதுவும் இல்லாததால் வங்கிகள் அதிக நாட்கள் செயல்படும். இந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் எந்த எந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிகப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிப்ரவரியில் மொத்தம் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

  • பிப்ரவரி 1, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
  • பிப்ரவரி 14, 2026 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
  • பிப்ரவரி 15, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
  • பிப்ரவரி 22, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.
  • பிப்ரவரி 28, 2026 – வாரத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.

வார விடுமுறை நாட்கள் என பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ஐந்து நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிகப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 2026 பட்ஜெட்டில் தங்க பத்திரங்கள் குறித்து அறிவிக்குமா அரசு?.. எகிறும் எதிர்பார்ப்புகள்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் விடுமுறை

பிப்ரவரி 15, 2026 ஞாயிற்று கிழமை மட்டுமன்றி அன்று மகா சிவராத்திரி என்பதால் ஆந்திர பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நிதி சுதந்திரத்தை அடைய இந்த 4 இலக்குகளை கடக்க வேண்டியது கட்டாயம்.. என்ன என்ன?

வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள இந்த ஐந்து நாட்களில் ஏதேனும் வங்கி சேவைகளின் தேவைகள் இருந்தால் வாடிக்கையாளர்கள் அவற்றை முன்கூட்டியே செய்துக்கொள்ள திட்டமிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்கள், ஆன்லைன் பண பரிவர்த்தனை, யுபிஐ (UPI – Unified Payment Interface) பண பரிவர்த்தனை முறை ஆகியவை எப்போதும் போல பயன்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.