Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நிதி சுதந்திரத்தை அடைய இந்த 4 இலக்குகளை கடக்க வேண்டியது கட்டாயம்.. என்ன என்ன?

Four Financial Milestones To Reach Financial Freedom | ஒவ்வொருவருக்கும் நிதி பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், ஒவ்வொருவரும் நிதி மற்றும் பொருளாதார சுதந்திரத்தை அடைய இந்த 4 இலக்குகளை கடக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.

நிதி சுதந்திரத்தை  அடைய இந்த 4 இலக்குகளை கடக்க வேண்டியது கட்டாயம்.. என்ன என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 21 Jan 2026 12:38 PM IST

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பான பொருளாதாரத்தை கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நிலையான மற்றும் பாதுகாப்பான பொருளாதாரத்தை உருவாக்கினால் பொருளாதார சுதந்திரத்தை அடைய முடியும் என அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுப்பர். இருப்பினும் சிலர், பொருளாதாரத்தில் கடுமையான சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்வர். இந்த நிலையில், ஒருவர் பொருளாதார சுதந்திரத்தை (Financial Independence) அடைய இந்த 4 பொருளாதார நிலைகளை கடக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொருளாதார சுதந்திரத்தை அடைய கடக்க வேண்டிய 4 நிலைகள்

1. அவசர கால நிதி

ஒவ்வொருவரும் தங்களுக்கான அவசர கால நிதியை  உருவாக்கி வைப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. காரணம், எப்போது வேண்டுமானாலும் மருத்துவம், உயிரிழப்பு உள்ளிட்ட எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். ஒருவேலை திடீரென வேலை போய்விட்டால் மிகுந்த சிக்கல் ஏற்படும். உதாரணமாக ஒரு குடும்பத்தின் மாதம் வருமானம் ரூ.40,000 என்றால் 6 மாதத்திற்கு ரூ.2.4 லட்சம் ஆகும்.  எனவே ரூ.2.4 லட்சத்தை அவசர கால நிதியாக சேமித்து வைப்பது தேவையற்ற கடன் உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவும்.

இதையும் படிங்க : இன்னும் பொங்கல் பரிசு வாங்கலையா?.. மீண்டும் ஒரு சான்ஸ்.. இன்னைக்கே ரேஷன் கடைக்கு போங்க!

2. பாதுகாப்பு நிதி

ஒரு குடும்பம் தங்களது அவசரகால நிதியை உருவாக்கிய பிறகு பாதுகாப்பு நிதியை நோக்கி சேமிப்பை தொடங்க வேண்டும். அவசரகால நிதி கையில் இருப்பதன் காரணமாக எந்த வித பயமும் இல்லாமல் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய முடியும். அதன்படி, ரூ.10 லட்சத்தை இலக்காக வைத்து பாதுகாப்பு நிதியை உருவாக்க வேண்டும். ரூ.10 லட்சத்தை இருப்பு வைத்திருக்கும் நிலையில், அது மிகப்பெரிய தைரியத்த கொடுக்கும். அதுமட்டுமன்றி, பொருளாதாரத்தை மேலும் உயர்த்துவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கும்.

3. பாதுகாப்பு நிதியை வளர்த்தல்

பாதுகாப்பு நிதியான ரூ.10 லட்சத்தை உருவாக்கிய பிறகு அதனை அப்படியே வைத்துக்கொள்ளலாமல் அதனை முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு  முதலீடு செய்யும் பட்சத்தில் அந்த பணம் பல மடங்கு உயரும். அதாவது பாதுகாப்பு நிதி ரூ.10 லட்சத்தை உருவாக்க உங்களுக்கு 4-5 ஆண்டுகள் தேவைப்படுகிறது என்றால் அதனை அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளுக்கு நல்ல லாபம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அதன்படி, ஒருசில ஆண்டுகளிலேயே உங்களது பணம் ரூ.50 லட்சமாக வளர்ந்திருக்கும்.

இதையும் படிங்க : பட்ஜெட் 2026 : வரி செலுத்துவோருக்கு மீண்டும் குட் நியூஸ் சொல்வாரா நிர்மலா சீதாராமன் – எகிறும் எதிர்பார்ப்பு?

4. நிதி சுதந்திரம்

இதுதான் நிதி சுதந்திரத்தை பெறுவதற்கான கடைசி நிலை. நீங்கள் உருவாக்கிய ரூ.50 லட்ச நிதியை கூட்டு வட்டி முறையில் முதலீடு செய்ய வேண்டும். அல்லது பல மடங்கு லாபல் தரும் முதலீடுகள், சேமிப்பு திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும். அதன் மூலம் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு கனிசமான தொகை வந்துக்கொண்டே இருக்கும். அப்போது நீங்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டே உங்களது நிதி சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.