AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Nainar Nagendran Tamil Nadu Election: அதிமுக டூ பாஜக… கட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை… மீண்டும் வெற்றிக் கொடி நாட்டுவாரா நயினார்!

Tamil Nadu Elections 2026 : அதிமுகவில் இணைந்து பயணித்து வந்த நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்து மாநில தலைவர் என்ற பதவிக்கு உயர்ந்துள்ளார். இவர் வருகிற சட்டமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட்டால் மீண்டும் வெற்றியை பதிவு செய்வாரா .

Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 11 Mar 2026 12:09 PM IST
தமிழக பாஜக மாநில தலைவராக இருந்து வருபவர் நயினார் நாகேந்திரன். இவர், கடந்த 1960- ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி நாகேந்திரன் என்பவருக்கு மகனாக பிறந்தார். ஆரம்ப காலத்தில் தொழில் செய்து வந்த நயினார் நாகேந்திரன், பின்னர் அவரது தந்தையின் மூலமாக அதிமுகவின் முக்கிய புள்ளியாக திகழ்ந்து வந்த கருப்பசாமி பாண்டியன் மூலம் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் படிப்படியாக வளர்ந்து 1990-களில் முக்கிய தலைவராக திகழ்ந்தார். பின்னர், 2001 மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானார்.

1 / 5
பின்னர், 2001 மற்றும் 2006- ஆம் ஆண்டுகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் மின்சாரம், தொழில்துறை, போக்குவரத்து துறை அமைச்சராக நயினார் நாகேந்திரன் பதவி வகித்தார். இதன் பின்னர், சில காரணங்களால் அதிமுகவிலிருந்து விலகிய நயினார் நாகேந்திரன் கடந்த 2017-ஆம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இணைந்த சிறிது ஆண்டுகளிலேயே 2020- இல் தமிழக பாஜக துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர், 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றதுடன் 3- ஆவது முறையாக சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தார்.

2 / 5
இதை தொடர்ந்து, கடந்த 2025- ஆம் ஆண்டு தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். கடந்த 2001- ஆம் ஆண்டு அதிமுக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் களமிறங்கிய நயினார் நாகேந்திரன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஏ. எல். சுப்பிரமணியனை 40.93 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் களமிறங்கிய நயினார் நாகேந்திரன் திமுக வேட்பாளர் என். மலை ராஜாவிடம் தோல்வியை சந்தித்தார்.

3 / 5
பின்னர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் திமுக வேட்பாளர் ஏ எல் எஸ் லட்சுமணனை 54.83 சதவீத வாக்குகள் பெற்று 2-ஆவது முறையாக வெற்றியை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்ட நயினார் திமுக வேட்பாளர் ஏ. எல். எஸ். லட்சுமணனிடம் தோல்வியே தழுவினார். இதைத் தொடர்ந்து, 2021 சட்டமன்ற தேர்தலில் ஏ. எல். எஸ். லட்சுமணனை வீழ்த்தி 46.70 வாக்கு சதவீதம் பெற்று 3-ஆவது முறையாக தனது வெற்றியை நிலை நிறுத்தினார் நயினார் நாகேந்திரன்.

4 / 5
இதனிடையே 2019 மற்றும் 2024- ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட நயினார் தோல்வியை தழுவி இருந்தார். இதனால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் நயினார் நாகேந்திரன் இதே தொகுதியில் களம் காண்பார் எனவும், மீண்டும் வெற்றியை நிலை நிறுத்துவார் எனவும் பரவலாக பேசப்படுகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களின் நிலையை பொறுத்து அரசியல் களம் மாற வாய்ப்பு உள்ளது.

5 / 5
Follow Us