2026 பட்ஜெட்டில் தங்க பத்திரங்கள் குறித்து அறிவிக்குமா அரசு?.. எகிறும் எதிர்பார்ப்புகள்!
Sovereign Gold Bond | மத்திய அரசு மிகவும் லாபகரமான தங்க பத்திர திட்டத்தை செயல்படுத்தி வந்தது. அதில் முதலீடு செய்து ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு முதல் அரசு அவற்றை நிறுத்தி வைத்துள்ளது. தற்போது பட்ஜெட்டில் அரசு தங்க பத்திரங்கள் குறித்து அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய கலாச்சாரத்திலும், பொதுமக்களின் சேமிப்பு (Saving) மற்றும் முதலீட்டிலும் (Investment) தங்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஆண்டுக்கு குறைந்தது ஒரு சவரன் தங்கத்தையாவது வாங்கி சேமிக்க வேண்டும் என்பது பலரின் நோக்கமாக உள்ளது. ஆனால், தற்போதுள்ள நிலவரத்தை பார்த்தால் சாமானிய மக்களால் ஒரு சவரன் தங்கத்தை கூட வாங்க முடியாத சூழல் நிலவி வருவகிறது. தங்கம் இதேபோல் விலை உயர்ந்து வந்தால், அது சாமானியர்களின் எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் தான் பொதுமக்களின் கவனம் அரசின் தங்க பத்திரத்தின் (SGB – Sovereign Gold Bond) மீது திரும்பியுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் (2026 Union Budget) விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தங்க பத்திரங்களை அரசு மீண்டும் வெளியிடும் வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாதுகாப்பான லாபத்தை வழங்கும் தங்க பத்திர முதலீடு
பாதுகாப்பான லாபத்தை வழங்கும் சிறந்த முதலீடாக தங்க பத்திரங்கள் இருந்து வந்தன. அவை காகித வடிவில் இருப்பதன் காரணமாக தங்கத்தின் தூய்மை, பாதுகாப்பு மற்றுன் இன்சூரன்ஸ் ஆகியவற்றை குறித்து பொதுமக்கள் எந்தவித கவலையும் கொள்ள தேவையில்லை. இந்த தங்க பத்திரத்தில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் லாபம் மட்டுமன்றி, அதற்கு 2.5 சதவீதம் நிலையான வட்டியும் வழங்கப்படும். அதுமட்டுமன்றி, தங்க பத்திரத்தின் 8 ஆண்டுகள் முதிர்வு காலம் முடிந்த பிறகு கிடைக்கும் முழு தொகைக்கு முழுவதுமாக வரி விலக்கும் அளிக்கப்படும். இவ்வாறு மிகுந்த லாபத்தை வழங்க கூடிய சிறந்த திட்டமாக தங்க பத்திரங்கள் இருந்து வந்தன.
இதையும் படிங்க : மியூச்சுவல் ஃபண்டில் இப்படி முதலீடு செய்யுங்கள்.. மாதம் ரூ.1 லட்சம் வரை லாபம் பெறலாம்!
தங்க பத்திரங்களை வெளியிடுவதை நிறுத்திய அரசு
இவ்வாறு சாமானிய மக்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டமான தங்க பத்திரங்களை வெளியிட்டு வந்த அரசு 2024 ஆம் ஆண்டு முதல் அதனை வெளியிடுவதை நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்காக மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அரசு மீண்டும் தங்க பத்திரங்களை வெளியிடுமா என்ற எதிர்ப்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழ தொடங்கியுள்ளது.