Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மியூச்சுவல் ஃபண்டில் இப்படி முதலீடு செய்யுங்கள்.. மாதம் ரூ.1 லட்சம் வரை லாபம் பெறலாம்!

Get 1 Lakh Every Month In Mutual Fund Investment | தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பலருக்கும் அதிக லாபம் தரக்கூடிய வகையில் முதலீடு செய்ய தெரியவில்லை. இந்த முறையை பயன்படுத்தி முதலீடு செய்தால் அதிக லாபத்தை பெற முடியும்.

மியூச்சுவல் ஃபண்டில் இப்படி முதலீடு செய்யுங்கள்.. மாதம் ரூ.1 லட்சம் வரை லாபம் பெறலாம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 20 Jan 2026 12:35 PM IST

நேரடியாக பங்குச்சந்தையில் (Share Market) முதலீடு செய்ய விரும்பமில்லாதவர்களுக்கான மற்றொரு அம்சம் தான் இந்த மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund).  மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெற முடியும் என்பதால் பெரும்பாலானவர்கள் தற்போது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து மாதம் ரூ.1 லட்சம் வருமான பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன?

ஒருவர் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறார் என்றால் அவர் முதலீடு செய்யும் அந்த பணத்தை நிறுவனங்கள் வேறு சில நிறுவனங்களில் முதலீடு செய்யும். அவ்வாறு முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் லாபம் தான் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும் லாபமாக உள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்ககளில் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது பலருக்கும் சிறந்த முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. அதன்படி ஒருவர் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு நல்ல தொகை லாபமாக கிடைக்கும்.

இதையும் படிங்க : பட்ஜெட் 2026 : வரி செலுத்துவோருக்கு மீண்டும் குட் நியூஸ் சொல்வாரா நிர்மலா சீதாராமன் – எகிறும் எதிர்பார்ப்பு?

மாதம் ரூ.1 லட்சம் வருமான வர இப்படி முதலீடு செய்யுங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சிறப்பான லாபத்தை கொடுக்கும் என பலருக்கு தெரிந்திருந்தாலும், அதில் முதலீடு செய்வது எப்படி என பலரும் தெரியாமல் உள்ளனர். இந்த நிலையில், ஒரு எளிய முறையை பயன்படுத்தி முதலீடு செய்தால் மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம் என சிஏ நிதின் கவுஷிக் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிஏ நிதின் கவுஷிக் கூறுவது இதுதான்

அதாவது, எஸ்ஐபி முறையில் மாதம் ரூ.18,000 முதலீடு செய்ய வேண்டும். இதனை ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் என்ற அடிப்படையில் உயர்த்த வேண்டும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் முதலீடு செய்யும் தொகையில் இருந்து 6 சதவீதத்தை உயர்த்தி முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு இந்த முறையை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். அப்போது 20 ஆண்டுகள் முடிவடையும்போது 2.5 கோடி வரை நீங்கள் நிதியை உருவாக்கி இருப்பீர்கள்.

இதில் நீங்கள் முதலீடு செய்வது வெறும் ரூ.80 லட்சமாக மட்டும் தான் இருக்கும். ஆனால், நீங்கள் மேற்குறிப்பிட்ட முறையில் முறையாக 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதற்கான பரிசு தான் அந்த மீதமுள்ள ரூ.1.5 கோடி. இந்த பணத்தை நீங்கள் 5 சதவீதம் என்ற அளவில் திரும்ப பெற்றால் கூட உங்களுக்கு மாதம் ரூ.80,000 முதல் ரூ.1 லட்சம் வரை கிடைக்கும் என அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.