Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உச்சத்தில் தங்கம் விலை.. மேலும் விலை உயருமா?.. இடியை இறக்கிய நிறுவனங்கள்!

Will Gold Continue To Rise In The Future | உலக அளவில் தங்கம் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், தங்கம் சாமானிய மக்களின் எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

உச்சத்தில் தங்கம் விலை.. மேலும் விலை உயருமா?.. இடியை இறக்கிய நிறுவனங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Jan 2026 11:05 AM IST

தங்கம் விலை (Gold Price) கடந்த சில நாட்களாக கடும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில், தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.16,000-த்தை தாண்டியும், ஒரு சவரன் ரூ.1,34,000-த்தை தாண்டியும் விற்பனை செய்யப்படுகிறது. இது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மிக கடுமையான உச்சமாக உள்ளது. இவ்வாறு தங்கம் மிக கடுமையான விலை உயர்வை அடைந்து வரும் நிலையில், இனி வரும் காலங்களிலும் தங்கம் விலை உயருமா அது குறித்து வணிக நிறுவனங்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் உச்சத்தில் இருக்கும் தங்கம்

2026 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது மற்றும் புவிசார் பதற்றங்கள் உள்ளிட்டவை காரணமாக தங்கம் பல மடங்கு உயர்வை சந்தித்துள்ளது. குறிப்பாக வெனிசுலா, ஈரான் உள்ளிட்ட உலக நாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டி வருவதும், போர் எச்சரிக்கை விடுவதும் மிக முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.

இதையும் படிங்க : Bank Holiday : பிப்ரவரியில் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!

இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை உயருமா?

தற்போதைய நிலவரப்படி தங்கம் கடும் உச்சத்தில் உள்ள நிலையில், இனி வரும் நாட்களிலும் தங்கம் இத்தகைய கடுமையான உயர்வை சந்திக்குமா என்று பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழ தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் தங்கம் கிராம் ரூ.16,800-க்கும், சவரன் ரூ.1,34,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்று ஒரு நாளில் மட்டும் தங்கம் கிராமுக்கு ரூ.1190 உயர்ந்தும், சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்தும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : 2026 மத்திய பட்ஜெட்.. வருமான வரி குறித்து எழும் முக்கிய எதிர்பார்ப்புகள்!

இந்த நிலையில், மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் இனி வரும் நாட்களிலும் தங்கம் விலை உயரும் என்ற கணிப்பை வெளியிட்டுள்ளது. வெள்ளி விலை உச்சத்தை தொட்டுவிட்டது. இனி அது ஓய்வுக்கு சென்றுவிடும். தங்கத்தின் விலை இனிமேல் தான் உயரப்போகிறது என்று கூறியுள்ளது. இதேபோல கோல்டு மேன் சாக்ஸ் நிறுவனமும் தனது கணிப்பை மாற்றி அமைத்துள்ளது. தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 4900 டாலர்களை தாண்டும் என கணித்திருந்த அந்த நிறுவனம் தனது கணிப்பை தற்போது 5400 ஆக உயர்த்தியுள்ளது.