AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: இம்பேக்ட் வீரராக களமிறங்குகிறாரா ரோஹித் சர்மா? மும்பை பயிற்சியாளர் விளக்கம்!

Rohit Sharma Impact Player: ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ், தனது முதல் போட்டியை வருகின்ற 2026 மார்ச் 29ம் தேதி, தங்களது சொந்த மைதானமான வான்கடே ஸ்டேடியத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி, வரவிருக்கும் சீசனுக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

IPL 2026: இம்பேக்ட் வீரராக களமிறங்குகிறாரா ரோஹித் சர்மா? மும்பை பயிற்சியாளர் விளக்கம்!
ரோஹித் சர்மாImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Mar 2026 19:52 PM IST

இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது சீசனின் (IPL 2026) தொடக்கத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஐபிஎல் 2026ன் முதல் போட்டி 2026 மார்ச் 28ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ், தனது முதல் போட்டியை வருகின்ற 2026 மார்ச் 29ம் தேதி, தங்களது சொந்த மைதானமான வான்கடே ஸ்டேடியத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி, வரவிருக்கும் சீசனுக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சீசனில், ரோஹித் சர்மா (Rohit Sharma) மீது அதிக கவனம் உள்ளது. இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே, ஐபிஎல் 2026-ல் ரோஹித் சர்மா இம்பேக்ட் வீரராக விளையாடுவாரா என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ALSO READ: தோனிக்கு ஃபேர்வெல்? முன்னாள் வீரர்களை அழைத்த சிஎஸ்கே.. நிகழ்ச்சி எப்போது தெரியுமா?

மஹேல ஜெயவர்தனே விளக்கம்:


ரோஹித் சர்மா குறித்த கேள்விக்கு பதிலளித்த மஹேல ஜெயவர்தனே, ”ரோஹித் சர்மா கடந்த வாரம் எங்களுடன் இணைந்தார். வலைப்பயிற்சிகளில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஐபிஎல் 2026-ல், நாங்கள் ரோஹித்தை இன்னும் சிறப்பாக நிர்வகிக்க வேண்டும். ஏனென்றால் அவர் இன்னும் அணியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அதனால்தான் இந்த முறை அவரை முடிந்தவரை களத்தில் வைத்திருக்க முயற்சிப்போம். கடந்த சீசனில், ரோஹித் சில காயங்களால் பாதிக்கப்பட்டார். இருப்பினும், இந்த முறை அதுபோன்ற எதுவும் இல்லை.” என்றார்.

ரோஹித் சர்மா இம்பேக்ட் வீரராக களமிறங்குவாரா என்பது குறித்து பேசிய மஹேல ஜெயவர்தனே, “ஒரு பந்துவீச்சாளரை அணியின் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராகக் கொண்டுவர முடிவு செய்யும்போது, ​​எந்த வீரரை அணியிலிருந்து நீக்குவது என்பதை நாம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். உற்று நோக்கினால், நமது வீரர்களில் பெரும்பாலானோர் பந்துவீசவும் தெரிந்த ஆல்-ரவுண்டர்கள் ஆவர். தற்போது, ​​ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவர் மட்டுமே ஆல்-ரவுண்டர்கள் அல்லாதவர்கள். ரோஹித் சர்மா பீல்டிங்கில் 20 ஓவர்கள் வரை இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். எனவே, ரோஹித் இம்பேக்ட் வீரராக களமிறக்க மாட்டோம்” என்றார்.

ALSO READ: ஜெர்சியின் 7ம் நம்பரை விட்டுக்கொடுக்கும் தோனி..? வைரலாகும் ஃபேஸ்புக் பதிவு! என்ன காரணம்?

சூர்யகுமார் யாதவ் ஃபார்ம் குறித்து பேசிய ஜெயவர்தனே:

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், கடந்த 6 மாதத்திற்கு மேலான தனது ஆட்டத்தில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார். இதுகுறித்து பேசிய மஹேல ஜெயவர்தனே, ”சூர்யகுமார் யாதவின் ஆட்டம் குறித்து நாங்கள் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஏனெனில் அவர் ஒரு சிறந்த வீரர், தேவைப்படும்போது சிறப்பாகப் பங்களிக்கிறார். ஆட்டத்தில் நிலைத்தன்மை அவசியம் என்பது உண்மைதான், அதில் சூர்யா கவனம் செலுத்த விரும்புவார். இருப்பினும், 2026 டி20 உலகக் கோப்பையில் அவர் இந்திய அணியை வழிநடத்திய விதம் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது” என்றார்.

Follow Us