AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்திற்கான முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவித்த மத்திய அரசு.. பெரும் பலன் அடைய போகும் தமிழகம்!

Center Announces Major Infrastructure Projects For Tamil Nadu | 2026 - 2027 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கான பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்திற்கான முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை அறிவித்த மத்திய அரசு.. பெரும் பலன் அடைய போகும் தமிழகம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Mar 2026 13:30 PM IST

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் (Union Budget 2026 – 2027) தமிழகத்திற்கான (Tamil Nadu) சில முக்கிய திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் வெளியிட்டிருந்தார். இந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளும், திட்ட அறிவிப்புகளும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயில்வே சேவையை விரிவாக்க திட்டங்கள்

நீண்டகால பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தி இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பட்ஜெட், போக்குவரத்து இணைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. அதாவது, இரண்டு அதிவேக ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – பெங்களூரு இடையே ஒரு ரயிலும், ஹைதராபாத் – சென்னை இடையே ரயிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ரயில்கள் தெற்கு ரயில்வேயின் வருமானத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : 20 ஆண்டுகளுக்கான வீட்டு கடனை வெறும் 12 ஆண்டுகளில் அடைக்கலாம்.. எப்படி தெரியுமா?

தமிழ்நாட்டுக்கு ரயில்வே திட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூ.879 கோடி

தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களுக்கு ஆண்டுக்கு ரூ.879 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் மூலம் ரூ.6,600 கோடியை தாண்டியுள்ளது. இந்த நிதி, கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை முடித்து வைக்க உதவியாகவும், பாதுகாப்பு திட்டங்களை மேம்படுத்தவும் வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : LPG Crisis: கத்தாரிலிருந்து இந்தியா வந்த 46,000 மெட்ரிக் டன் எல்பிஜி.. எத்தனை சிலிண்டர்களை நிரப்பும் தெரியுமா?

வேலைவாய்ப்பையும், துறையையும் வலுப்படுத்த உதவும்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை மேம்படுத்தும் விதமாக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகள் இந்த நிதியின் மூலம் பலன்களை பெற உள்ளன. எம்எஸ்எம்இ-க்கள் மாநிலத்தின் வேலைவாய்ப்புக்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ.10,000 கோடி மாநிலத்தின் வேலை வாய்ப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Follow Us