Gold Price : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?.. இதுதான் நிலவரம்!
Gold Price Hiked Silver Price Remain Same | சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஆகஸ்ட் 17 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 17, 2026) தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை
2024, 2025 ஆம் ஆண்டுகளை போல 2026 ஆம் ஆண்டு தங்கத்திற்கு சாதகமான ஆண்டாக அமையவில்லை. காரணம், இந்த ஆண்டு தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஜூன் மாதம் தொடர் சரிவை சந்தித்த தங்கம், ஜூலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்தது. ஆனால், ரூ,14,000-த்தை தாண்டாமல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதையும் படிங்க : ATM : ஏடிஎம்-ல் இத்தனை சேவைகளா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
இந்த சூழலில் தங்கம் விலை உயராது, இதே விலையில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆகஸ்ட் மாதம் தொடங்கியதும் தங்கம் மேலும் ஷாக் கொடுத்தது. அதாவது, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் சரசரவென உயர்ந்த தங்கம், இடையில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்தது. அந்த வகையில், இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,270-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு சவரன் ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.