AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் சிபில் ஸ்கோர் குறையுமா?.. இதனை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Factors Which Affects Your Credit Score | வங்கி கணக்கு நடைமுறைகள், கிரெடிட் கார்டு உள்ளிட்டவற்றின் செயல்பாடுகள் காரணமாக கிரெடிட் ஸ்கோரில் தாக்கம் ஏற்படும். இந்த நிலையில், கிரெடிட் கார்டில் வீட்டு வாடகை செலுத்துவது கிரெடிட் ஸ்கோரை பாதிக்குமா என்பது குறித்து பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் சிபில் ஸ்கோர் குறையுமா?.. இதனை கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Aug 2026 16:57 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பண தேவைக்காக கிரெடிட் கார்டு (Credit Card) பயன்படுத்தி வருகின்றனர். மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் பலரும், கிரெடிட் கார்டு பயன்படுத்தி தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொண்டு பிறகு மாத தவணை முறையில் திருப்பி செலுத்திக்கொள்ளலாம். இவ்வாறு பல தேவைகளுக்காக கிரெடிட் கார்டு பயன்படுத்தப்படும் நிலையில், கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தினால் கிரெடிட் ஸ்கோர் (Credit Score) குறையுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரெடிட் ஸ்கோரை கடுமையாக பாதிக்கும் கிரெடிட் கார்டு தவறுகள்

கிரெடிட் கார்டில் நாம் செய்யும் சில தவறுகள், நமக்கே தெரியாமல் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதாவது, சில பரிவர்த்தனைகள் கிரெடிட் ஸ்கோரை வெகுவாக குறைய செய்யும். அவற்றை குறித்து கவமாக இருக்க வேண்டும். அந்த வகையில், கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்துவது எத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும் என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

இதையும் படிங்க : மாதம் ரூ.600 செலுத்தினால் ரூ.1 லட்சம் பெறலாம் – ஸ்டேட் வங்கியின் சேமிப்பு திட்டம்

வீட்டு வாடகை – மறைமுக கட்டணங்கள்

சமீப காலமாக பொதுமக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு மூலம் வீட்டி வாடகை செலுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்துவது மிகவும் எளிதாக தோன்றினாலும், அதில் சில மறைமுக கட்டணங்கள் விதிக்கப்படும். அதாவது, கிரெடிட் கார்டு மற்றும் பிராப்பர்ட்டி நிறுவனங்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்கு Processing Fee வசூல் செய்கின்றன.

இதையும் படிங்க : இன்று தான் கடைசி தேதி.. இகேஒய்சி செய்யவில்லை என்றால் நாளை முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது!

Processing Fee வாடகை தொகையில் இருந்து 1 முதல் 3 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. அதாவது, நீங்கள் வீட்டு வாடகை செலுத்த கிரெடிட் கார்டில் இருந்து ரூ.20,000 செலுத்தி இருந்தால், அதில் 2 சதவீதம் என்பது ரூ.400 ஆகும். இந்த நிலையில், மாதம் மாதம் ரூ.20,000 கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தும் நபராக நீங்கள் இருந்தீர்கள் என்றால் மாதம் மாதம் கூடுதலாக ரூ.400 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரெடிட் கார்டில் மொத்த லிமிட்டில் 30 சதவீதத்திற்கு கீழ் மாத செலவு இருப்பது தான் கிரெடிட் ஸ்கோரில் எந்தவித சிக்கலும் இல்லாமல் கணக்கை முறையாக பராமரிக்க உதவும். எனவே நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது 30 சதவீதத்திற்கும் மேல் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Follow Us